2024 நவம்பர் 02, சனிக்கிழமை

விமானத்தை முந்திச்செல்லும் முச்சக்கர ஸ்கூட்டர்

Kogilavani   / 2011 மே 11 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முச்சக்கர சைக்கிள் போன்று பொதுவாக உடற்பாதிப்பு கொண்டவர்கள் நடமாடுவதற்குப் பயன்படுத்தப்படும் முச்சக்கர ஸ்கூட்டர் (மொபிலிட்டி ஸ்கூட்டர்) ஒன்றை தரையில் விமானத்தைவிட வேகமாக செல்லக் கூடியதாக மாற்றியுள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர்.

தண்ணீர் குழாய் பொருத்துநரான கொலின் பூர்ஸ் (வயது 31) என்பவரே இதை  உருவாக்கியுள்ளார்.

கடந்த வருடம் இவர் மணித்தியாலத்திற்கு 71.59 மைல் வேகத்தில் பயணிக்கும் மொபிலிட்டி ஸ்கூட்டரை வடிவமைத்து புதிய உலக சாதனை படைத்திருந்தார்.  

அதன்பின் பலவாரங்களாக  மாற்றங்களைச் செய்து விமானமொன்றுடன் போட்டியிடக்கூடிய அளவுக்கு சக்திவாய்ந்த வாகனமொன்றாக அதை வடிவமைத்துள்ளார்.

'இந்த ஸ்கூட்டர் வேகத்தை அதிகரிப்பதற்காக கியர் விகிதத்தில்  சில மாற்றங்களை செய்ய தீர்மானித்தேன். ஆனாலும் விமானத்துடன் அதை சோதித்து பார்ப்பதென்பது வேடிக்கையானதுதான்.

இந்த ஸ்கூட்டர் எப்படி செயற்படுமோ என நான் கவலைகொண்டிருந்தேன். ஆனால், ஆரம்பத்தில் ஆச்சரியமளிக்கும் விதமாக வேகமாக இயங்கி விமானத்தை முந்திச்சென்றமை மகிழ்ச்சியளிக்கிறது' என இந்த ஸ்கூட்டர்  குறித்து கொலின் பூர்ஸ் தெரிவித்துள்ளார்.

இதை வடிவமைப்பதற்காக அவர் 3 மாதங்களை செலவழித்துள்ளார். 125 சி.சி. மோட்டார் சைக்கிளின் இயந்திரமொன்றை இந்த மொபிலிட்டி ஸ்கூட்டருக்கு அவர் பொருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .