Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 02, சனிக்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 26 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ரோபோ' என்ற சொல் எடுத்தாலே இயக்குநர் ஷங்கரின் 'எந்திரன்' திரைப்படம்தான் தற்சமயம் எல்லோருக்கும் ஞாபகம் வருகிறது. ஏனெனில் இயந்திர மனிதனால் எப்படியெல்லாம் சாதிக்க முடியும் என்பதை கற்பனைக்கு அப்பாற்சென்று நிரூபித்திருக்கிறார் ஷங்கர். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா என பலர் கேள்விகேட்கிறார்கள்.
இந்நிலையில்தான், இயந்திர மனிதன் பற்றி ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்ற விஞ்ஞானிகள், இயந்திர மனிதனின் புத்தூக்கம் பற்றி சிந்திக்க தொடங்கியிருக்கின்றார்கள். இதற்கும் நாங்கள் 'எந்திரன்' ரஜனியோடு ஒப்பிட்டு கூறினால் தெளிவாக புரியும் என நம்புகின்றோம். 'எந்திரன்' ரஜனியிடம் புத்தகங்களைக் கொடுத்தால் அதனை அப்படியே மனதில் படியவைத்துவிடுவதுபோல் காட்சிகள் அமைந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். அதேபோல் உண்மையான இயந்திர மனிதர்களுக்கும் படிக்கும் பழக்கத்தை விருத்தி செய்வதற்கு விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள்.
எழுத்துக்களை அப்படியே படித்து விளங்கிக்கொள்வதென்பது எளிதான காரியமல்ல. ஆகையினால் முதலில் குறியீடுகளை ரோபோக்களுக்கு விளங்க வைக்கிறார்கள். அத்தோடு பிரபலமான கடைகளின் பெயர்பலகைகள், தெருக்களின் பெயர்கள் போன்றவற்றை படித்து விளங்கிக் கொள்வதற்கு ரோபோக்களை தயார்படுத்தும் முயற்சியில் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தினை சேர்ந்த விஞ்ஞானி டொக்டர் இங்மர் போஸ்னெர் தலைமையினான குழு முயற்சித்து வருகிறது.
இந்த முயற்சிக்காக 'மார்க்' என்னும் ரோபோ தயாராகியிருக்கிறது. இதற்கு 'ஓ.சி.ஆர்.' தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, அதாவது பார்வையால் பொருட்களை அடையாளம் காணுகின்ற முறையினை பயன்படுத்தி ரோபோக்களின் அறிவுகூர்மையை விருத்தி செய்ய விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள்.
இதுபற்றி விஞ்ஞானிகள் குறிப்பிடுகையில்... 'எழுத்துக்களை புரிய வைப்பதென்பது மிகவும் கடினமான முயற்சி. ஏனெனில் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு வளைவுகளைக் கொண்டது. ஆகையினால் அதனை ரோபோக்களால் புரிந்துகொள்வதில் கடினம் அதிகம். ஆகையினால்தான் முதலில் குறியீடுகளை புரிந்துகொள்வதற்கும் பொருட்களை, பிரபல்யங்களை அடையாளம் காண்பதற்குமாக அறிவினை ரோபோக்களுக்கு படிப்பிக்கிறோம். இதனால் எதிர்காலத்தில் மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்...' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே, எதிர்வரும் சில வருடங்களில் மனிதனுக்கு இணையாக இயந்திரங்களும் உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி மனிதனுக்கு நிகராக இயந்திரங்கள் உருமாறினால் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதற்கு 'எந்திரன்' திரைப்படம் நல்லதொரு எடுத்துக்காட்டு.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago