2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பாரிய விண்கல்லினால் பூமிக்கு பேராபத்து!

A.P.Mathan   / 2010 ஜூலை 29 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரமாண்டமான விண்கல்லொன்று 2182ஆம் ஆண்டு பூமியுடன் மோதவுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். 1999 RQ36 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இவ்விண்கல் பூமியுடன் மோதுவதற்கான சந்தர்ப்பம் 1000இல் ஒன்று என்ற நிகழ்தகவில் காணப்படுவதாகவும் அவ்விஞ்ஞானிகள் மேலும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

1999 RQ36 விண்கல்லானது 2182ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் திகதி பூமியுடன் மோதுவதற்காக சாத்தியக் கூறுகள் அதிகமாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 1800 அடி நீளமான இந்த விண்கல் பூமியுடன் மோதுண்டால் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும். மேக்ஸிக்கோவின் Chicxulub கிடங்கினை உருவாக்கிய விண்கல் மோதலானது பூமியில் பாரிய சுனாமி போன்ற அனர்தத்தினை ஏற்படுத்தியிருக்கும். அந்த விண்கல் மோதல்தான் டைனோஸர் போன்ற விலங்கினங்களின் அழிவுக்கும் காரணமாக அமைந்திருந்தது. அதைவிட பாரிய அழிவினை 1999 RQ36 விண்கல் ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விண்கற்கல் சூரிய சக்தியினை உள்வாங்கி மீண்டும் அந்த சக்தியை கதிர்ப்பு செய்வதால் விண்கற்களில் பாதைகள் மாறுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன எனவும் விஞ்ஞானிகள் ஆறுதல் கூறுகின்றனர்.

எது எப்படியிருப்பினும் இந்த பாரிய விண்கல்லானது தற்பொழுது பூமியின் பின்னால் இருப்பதால் 2011ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் அதனை விஞ்ஞானிகளால் அவதானிக்க முடியுமாம்.

1999 RQ36 விண்கல்லின் பாதையினை மாற்றவேண்டுமானால் 100 வருடங்களுக்கு முன்பாகவே அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். ஆகையினால் அணுகுண்டுகளை காவிச்செல்லும் விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0

  • Ossan Salam - Qatar Friday, 30 July 2010 12:54 AM

    நல்ல வேளை இப்பொழுது உயிருடன் உள்ள எவரும் அந்த பாரிய அழிவு பற்றிக் கூறக்கூடிய காலகட்டத்தில் உயிருடன் இருக்கவே மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்..... அந்தக் கல் வீழ்ந்தாலும் விழாவிட்டாலும் நிச்சயமாக இந்த உலகை ஒருநாள் எல்லாம் வல்ல இறைவன் அழித்தே தீருவான் !!!!

    Reply : 0       0

    ishrath muhammad Monday, 02 August 2010 12:41 AM

    குல்லு நப்ப்சின் சஹிகதுள் மௌத். ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே ஆகனும், அதே போல் இந்த உலகமும் ஒரு நாள் அழிந்தே தீரும். அழிவது வெகு தூரம் இல்லை. (அல்லாஹு அஹ்லம்.)

    Reply : 0       0

    Unmai Thursday, 12 August 2010 06:30 PM

    விஞ்ஜானிகள் மிகவும் திறமைசாலிகள் , இக்கல்லானது பூமி உடன் மோதினாலும் மோதவிட்டலும் காரணம் கூறுவார்கள்.இதுஎல்லாம் மனிதனின் சிந்தனைக்கு அப்பால்பட்டது . எல்லாம் இறைவன் உடைய செயல் . (கலாநிதி மாணவன் )

    Reply : 0       0

    xlntgson Sunday, 26 September 2010 10:04 PM

    இறைவன் உலகை படைத்தான், அழிப்பான். அதற்கு விஞ்ஞான அறிவு தேவை இல்லை. நான் நினைக்கின்றேன், விஞ்ஞானம் என்பது உலகியல் படிப்பு தெய்வ சிந்தனை உடையவர்கள் விஞ்ஞானம் தேடுபவர்கள் அல்ல மெய்ஞானம் விஞ்ஞானம் 2 ம்1 என்று வாதாடினாலும் அநேகமான இடங்களில் மாறுபடுகிறது. ஏதோ ஒரு சக்தி ஆதி அந்தமாக ஆரம்ப முடிவாக முதலும் இறுதியாக இருக்க வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டிருந்தாலும் தங்களது ஆராய்ச்சியை தொடர இறைவன் இருக்கின்றானா இல்லையா என்ற சிந்தனையே இல்லாமல் இருந்திருக்கின்றனர். ஐன்ஸ்டீன் போல. என்றாலும் ஆத்மா உண்டு என்க!

    Reply : 0       0

    xlntgson Friday, 22 October 2010 09:00 PM

    அனாத்மா என்று ஒன்று பௌத்த மதத்தத்துவத்திலும் சில இந்து ஜெயின் மதத்தத்துவத்திலும் காணப்படுகிறது.
    அது எவ்வாறு என்று விளங்கவில்லை
    எல்லா பௌத்தர்களும் அல்ல, ஒரு பிரிவினர் அவர்கள் இலங்கையிலும் மிக அதிகமாக இருக்கின்றனர்.
    அது உங்களுக்கு விளங்குகிறதா எவ்வாறென்று விளக்க இயலுமா? ஆத்மா அனாத்மா பரமாத்மா எல்லாவற்றையுமே மறுக்கும் நாத்திகர்களை நான் கேட்கவில்லை.
    துவைத, அத்வைத, சைவ, சமண, மகாயான, ஹீனயான பிரிவுகள் எல்லாம் ஆத்மாவை வலியுறுத்துவதாகவே தெரிகிறது.
    ஆத்மா இல்லாமையை என்னால் சிந்தித்து பார்க்க முடியவில்லை விஞ்ஞானவிளக்கம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .