Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
செய்தி பரிமாற்ற சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு குறைந்தவர்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் சட்டம் ஒன்று, ஐரோப்பிய ஒன்றியத்தில் கொண்டுவரப்படவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் வாட்சப்பை பயன்படுத்தும் வயது எல்லையானது, தற்போது 13 எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஐரோப்பாவில் அடுத்த மாதம் புதிய தகவல் பாதுகாப்பு விதிமுறைகள் அறிமுகம் காணவுள்ளன. அதனை முன்னிட்டு, இந்த வயது வரம்பு உயர்த்தப்படவுள்ளது. இந்த புதிய விதிகளுக்கு அமைய பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சப் பயனர்கள் தமது வயதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவல் பாதுகாப்பு விதிமுறை வரும் மே 25 ஆம் திகதி அமுலுக்கு வரும்போது, தமது தகவல்களை நிறுவனங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது பற்றி மக்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் கொண்டுவரவுள்ளது. இதன்போது தமது தனிப்பட்ட தரவுகளை அழிக்கும் உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படும். எவ்வாறாயினும், ஐரோப்பாவுக்கு வெளியில் தனது வயது வரம்பை தொடர்ந்தும் 13 ஆக தக்க வைத்துக்கொள்ள வாட்சப் தீர்மானித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago