2024 நவம்பர் 02, சனிக்கிழமை

125 பில்லியன் ரூபாய்க்கு இன்ஸ்ராகிராமை கொள்வனவு செய்தது பேஸ்புக்

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 09 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல புகைப்படப் பகிர்வு மென்பொருளான "இன்ஸ்ராகிராம்"இனை புகழ்பெற்ற சமூகவலைத்தளம் “பேஸ்புக்“ ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (125 பில்லியன் ரூபாய்) கொள்வனவு செய்துள்ளது. இன்ஸ்ராகிராமினை கொள்வனவு செய்தமை பற்றி பேஸ்புக்கின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் சூக்கர்பெக் கருத்துத் தெரிவிக்கையில்...

”இன்ஸ்ராகிராம் வெகுவிரைவில் அனைவரும் பயன்படுத்துகின்ற சமூகத்தளமாக மாற்றமடையும். வெகுவிரைவில் தங்களுக்கு பிடித்தமான படங்களை நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். அதற்காக இன்ஸ்ராகிராம் குழுவினருடன் மிக நெருக்கமான தொடர்பினை பேணவிருக்கிறோம். இன்ஸ்ராகிராமும் அதன் பெறுமதியான குழுவினரும் எங்களுடன் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி. நமது இணைவின்மூலம் சிறந்த பெறுதியை வழங்குவதற்கு காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஐபோன்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சிறிய மாற்றங்களைச் செய்து அழகாக்கி பகிரப் பயன்படும் இம்மென்பொருள் தற்போது ஐபோன்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு 27 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பயனாளர்களைக் கொண்டு காணப்படுகிறது. பேஸ்புக்குடன் இணைந்திருப்பதனால் இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .