2024 நவம்பர் 02, சனிக்கிழமை

12.12.12 - ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ நாள்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அபூர்வ நாள் இன்றாகும். 12.12.12 என்று அமையும் இந்த திகதி ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மாத்திரமே வரும். இந்த நாள் தொடர்பில் பலர் மத்தியிலும் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
 
பன்னிரண்டு என்ற எண்ணிற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. 12 ராசிகள், 12 மாதங்கள், கடிகாரத்தில் 12 எண்கள், ஒரு டஜன் என்பது 12 ஐ குறிக்கும். 2, 3, 4, 6 12 ஆகிய இந்த எண்களில் பின்னம் இன்றி வகுபடும் மிகச்சிறிய எண் 12.

ஐரோப்பா மட்டுமல்லாது கிழக்காசிய நாட்டினரும் நாள், மாதம், வருடம் எல்லாம் 12ஆம் எண்ணில் வருவதை அதிர்ஷ்ட நாளாக கருதுகின்றனர். இந்த நாளில் நல்ல காரியங்கள் செய்தால் அது வெற்றியடையும் என்றும் நினைப்பதால் திருமணம் செய்து கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறார்கள். எனவே பல நாடுகளிலும் இன்றைய தினத்தில் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகின்றது.

சிங்கப்பூர், ஹொங்கொங், தாய்லாந்து போன்ற நாடுகளில் இன்றைய தினத்தில் திருமணம் செய்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஹொங்கொங் நகரில் மட்டும் 696பேர் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் முன் பதிவு செய்துள்ளனராம். அதேபோல சிங்கப்பூரிலும் திருமணம் செய்ய விரும்பி 540பேர் பதிவு செய்துள்ளனர். இது தவிர சீனா, ஐரோப்பிய நாடுகளிலும் இன்று நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறுகின்றன.

இதேவேளை, மேலைத்தேய நாடுகளைப்போல இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் இந்த நாளில் குழந்தை பிறந்தால் தங்களுக்கு அதிர்ஷ்டம் என்று கர்ப்பிணிகள் கருதுகின்றனர். தங்களின் குழந்தையை 12.12.12 தினத்தன்று சிசேரியன் செய்து வெளியே எடுக்க வேண்டும் என்று டாக்டர்களிடம் பல தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனராம்.

ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் ஏதாவது ஒரு நாளை சிறப்பான நாளாக கருதுவார்கள். 10.10.10, 11.11.11 என்பது போல இந்த ஆண்டு 12.12.12 திகதி முக்கியமான நாளாக கருதப்படுகிறது.  இந்த நாளில் உலகம் அழிந்துவிடும் என்று மேற்கத்தேய நாடுகளில் புரளி கிளம்பினாலும் அதைப் பற்றி அச்சப்படாமல் அதை கொண்டாட முடிவு செய்து வருகின்றனர் ஒரு சாரார் என்பது குறிப்பிடத்தக்கது. (தற்ஸ்தமிழ்)

You May Also Like

  Comments - 0

  • Rizwan Farook Saturday, 15 December 2012 10:44 AM

    12.12.2012 = 12.12.12
    12.12.2112 = 12.12.12

    குறிப்பு:
    2012 என்பது தனி 12.... இதற்கு அடுத்ததாக 3012 தான் தனி 12 ஆக வரும்... 2112 என்பது 112 என்பதை கருத்திற்கொள்க. அது தனி 12 ஆகாது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .