Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 ஜூலை 22 , மு.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
திரைப்பட இயக்குனர் என தன்னை இனங்காட்டிக்கொண்ட ஒருவர், சினிமாவில் நடிப்பதற்கு சந்தர்ப்பம் வாங்கித் தருகின்றேன் எனக்கூற, 100க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றி, சீரழித்தவருக்கு எதிராக, சம்பந்தப்பட்டவரின் மனைவியே முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தன்னை திருமணம் செய்துகொண்டவர், சில மாதங்களுக்கு முன்னர் தன்னிடமிருந்த பணம் மற்றும் நகைகளை அபகரித்துவிட்டார். இவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட நான், அவருடைய கையடக்க தொலைபேசியை சோதனையிட்டேன்.
அதில், பல பெண்களுடன் ஆபாசமான வார்த்தைகளை பேசுவது, நிர்வாணப்படங்களை வைத்திருத்தல் மற்றும் ஒலிப்பதிவுகளும் இருந்தன. அதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன். அத்துடன், பல பெண்களை ஏமாற்றி பாலியல் உறவும் கொண்டுள்ளார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago