2024 நவம்பர் 23, சனிக்கிழமை

100 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டைனோஸரின் சுவடுகள் மீட்பு

Kogilavani   / 2014 ஜனவரி 31 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


100 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டைனோஸரின் சுவடுகளை சீனாவிலுள்ள டைனோஸர் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

கிறெஸ்டேசியஸ் காலத்தில், ஆசியாவில் இந்த தாவரவுண்ணியான சோறோபொட் இன டைனோஸரஸ் வாழ்ந்ததுள்ளது. தற்போது கிடைத்துள்ள இதன் சுவடுகள் 'டைட்டான்' இன டைனோஸர்பற்றி மேலும் விளக்கமளித்துள்ளது.

டைட்டானோசோறியா இன டைனோஸர் உலகில் வாழ்ந்த மிகப்பெரிய பிராணிகளுள் அடங்கும்.

இந்த கண்டுபிடிப்பு சீனாவின் கண்சு மாகாணத்தில் லன்சு-மின்கா பள்ளத்தாக்கில் செய்யப்பட்டுள்ளது.

கடந்த தசாப்தத்தில் இதே காலத்துக்குரிய வேறு இரண்டு டைட்டானோசோர் இன டைனோஸர்களின் சுவடுகள் கண்டெடுக்கப்பட்டன.

சீனாவைச் சேர்ந்த கலாநிதி பட்ட மாணவன் லிகுவா லி மற்றும் பேராசிரியர் பீட்டர் டொட்ஸன் ஆகியோர் இவ் ஆய்வை நடத்தியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .