2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

மீண்டும் பேஸ்புக் தொடர்பான வதந்தி

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீங்கள் சட்ட அறிக்கையை (legal notice) பிரசுரிக்காவிட்டால், உங்களுடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டத்துக்கு பகிர்ந்த படங்கள் மற்றும் ஏனைய விடயங்களின் காப்புரிமையை (copyright) இழந்து விடுவீர்களோ அல்லது உங்களது பேஸ்புக் புரோபைலை தனிப்பட்டதாகவோ, இரகசியமானதாகவோ மாற்றுவதுக்கு பேஸ்புக் கட்டணம் அறவிடப்போகின்றதோ என்ற தகவலை நீங்கள் பேஸ்புக்கில் கண்ணுற்றிருக்கலாம். சில வேளை இந்தத் தகவலை நீங்கள் பகிர்ந்தும் இருக்கலாம்.

இது முற்றிலும் ஒரு வதந்தியாகும், முன்னொரு காலத்தில் வலம்வந்த இந்த தகவலே மீண்டும் ஒரு சுற்று வருகிறது. பேஸ்புக் தொடர்பில் அதீத ஈர்ப்புடன் இருந்து, தமது கணக்குகளை தனிப்பட்டதாகவும், இரகசியமாகவும் பேண விரும்புவோரே, இந்த வதந்தியின் பால் அதிகம் ஈர்க்கப்பட்டு மேற்படி தகவலை அதிகம் பகிர்ந்தோராக இருப்பர்.

மேற்படி தகவல் இத்துடன் மூன்றாவது தடவையாக வலம் வருகிறது. இவ்வருடம் ஜனவரி மாதம் ஒரு சுற்று வந்திருந்த நிலையில், 2012 ஆம் ஆண்டும் இதே போன்றதொரு வதந்தி உலா வந்திருந்தது.

இதேவேளை, அன்று செவ்வாயில் தண்ணீர் இருப்பதான செய்தியுடன் தொடர்புபடுத்திய பேஸ்புக் நிறுவனம், “ செவ்வாயில் தண்ணீர் இருக்கலாம், ஆனால் இன்று இணையத்தில் நீங்கள் வாசித்த எல்லாவற்றையும் நம்பாதீர்கள்” என பேஸ்புக் தெரிவித்துள்ளதுடன், பேஸ்புக் இலவசமானது என்றும், எப்போதும் பேஸ்புக் இலவசமாகவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .