2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

$1.2 பில்லியனுக்கு ஒபெரா விலை போகின்றது?

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 13 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணைய உலாவியான ஒபெராவை 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்குவதற்கான கோரிக்கை, சீன இணைய நிறுவனங்களின் கூட்டமைப்பொன்றிடம் இருந்து கிடைக்கப்பெற்றதாக ஒபெரா உறுதிப்படுத்தியுள்ளது.

ஒபெராவை வாங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையானது, ஒபெராவின் தற்போதைய சந்தைமதிப்பை விட 53 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோல்டன் பிரிக் மற்றும்யொங்லியான் ஆகியவற்றின் முதலீட்டு நீதியின் மூலம் குன்லுன் மற்றும் குய்ஹோ 360 ஆகிய நிறுவனங்களே ஒபெராவை வாங்குவதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தன.

இந்நிலையில், ஒபெராவின் பணிப்பாளர் சபையானது, சீன இணைய நிறுவனங்களின் மேற்படிக்கோரிக்கையை அனுமதிக்குமாறு, அதன் பங்குதாரர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேற்படி கோரிக்கையானது, உறுதியான மூலோபாயம் மற்றும் தொழிற்துறை தர்க்கம் என ஒபெராவின் பிரதம நிறைவேற்றதிகாரி லார்ஸ் போய்லேசென் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .