Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முருகவேல் சண்முகன்
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் கடந்த ஜூன் மாதத்தில் கால்பதித்த PickMeயானது, கடந்த செவ்வாய்க்கிழமை (15), தனது அலைபேசி செயலியின் பயனர் இடைமுகத்தை தமிழிலும் சிங்களத்திலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், மேலுமொரு மைற்கல்லை PickMe எட்டியுள்ளது.
தற்போது கொழும்பிலும் கட்டுநாயக்கவிலும் காணப்படும் PickMeயானது, அடுத்த வருடம் முதல் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்தும் திட்டத்துக்கு, தமிழிலிலும் சிங்களத்திலும் பயனர் இடைமுகத்தை அறிமுகப்படுத்தியமையானது பாரியளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தையில் தற்போது PickMeக்கு வேறு போட்டியாளர்களும் காணப்படுகின்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையின் புரிதலைக் கொண்டு, அடிமட்டத்திலிருந்து மத்தியதரம், உயர்தரம் என அனைத்து மட்டங்களுக்கான சந்தைகளுக்கான முச்சக்கரவண்டிகள், மினி கார்கள், கார்களைக் கொண்டு இந்த சந்தையில் குறுகிய காலத்துக்குள்ளேயே இலங்கையில் ஜாம்பவனாக முடிசூடிக் கொண்டுள்ளது.
PickMeயின் கட்டணங்களானவை மிகக் குறைந்ததாதாகவும் அதியுயர்ந்ததாகவும் காணப்படாமல் நியாயமான கட்டணங்களைக் கொண்டமைந்துள்ளது. முச்சக்கர வண்டிகளுக்கான சராசரிக் கட்டணம் கிலோமீற்றருக்கு 35 ரூபாயாக இருப்பதுடன் மினி கார்களின் சராசரிக் கட்டணமானது கிலோமீற்றருக்கு 45 ரூபாயாக விளங்குவதுடன் கார்களின் சராசரிக் கட்டணமானது கிலோமீற்றருக்கு 60 ரூபாயாகவும் விளங்குகின்றது. PickMeயானது தற்போது 2,000க்கு மேற்பட்ட வாகனங்களைக் கொண்டுள்ளதுடன் தினசரி 1,000க்கு மேற்பட்ட பயணங்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
PickMeயில் காணப்படும் GPS காரணமாக தமக்கு அருகே உள்ள வாகனத்தை வாடிக்கையாளர் இலகுவாக அடையாளங் கண்டு கொள்வதால் PickMeயினுடைய சாரதிகள் தமது வாடிக்கையாளர்களைத் தேடி வீதி வழியே அலையவேண்டிய அவசியம் இல்லை. இதனால், வாகன சாரதிகளின் 50 சதவீத எரிபொருள் விரயம் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சூழல் மாசடைதல் குறைக்கப்படுவதோடு, சாரதிகளின் பொருளாதாரமும் உயர்ச்சியடைகிறது.
சாதாரணமாக PickMeயானது ஒரு வாடிக்கையாளரின் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீற்றர் ஆரைக்குள் உள்ள வாகனங்களைக் காட்டுவதுடன், இரண்டு மணித்தியாலங்களுக்கு பயணங்களை முற்பதிவு செய்வதற்கான வசதியையும் கொண்டுள்ளது. தவிர, ஒவ்வொரு பயணத்தின்போதும் அப்பயணத்துக்குரிய கட்டணங்களை உடனுக்குடன் காட்டும் வசதியையும் PickMe கொண்டுள்ளது.
இதேவேளை PickMeயானது மேற்கொண்டுள்ள இற்றைப்படுத்தல்களில் Business Portal, ETA Sharing என்பனவும் அடங்குகின்றன. இதில், Business Portalஇன் மூலம், நிறுவனங்கள், தமது பணியாளர்களுக்காக இலகுவாக வாகனங்களைப் பெற்று, அப்பயணங்களை கண்காணிப்பதன் மூலம் பாதுகாப்பானதும் சிறந்ததுமான பயணங்களையும் வழங்க முடியும். அடுத்து, ETA Sharing என்பது, PickMeயில் பயணத்தை மேற்கொண்டிருக்கும் ஒருவர், தனது பயணத்தின்போதே, பயணம் எத்தனை மணிக்கு ஆரம்பமானது, எங்கு, எத்தனை மணிக்கு நிறைவுபெறும், வாகனத்தின் தகவல்கள், பயணிக்கும் பாதை உள்ளிட்ட பயணத் தகவல்களை தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கோ நண்பர் ஒருவருக்கோ தெரிவிக்க முடியும்.
தற்போது அன்ரொயிட் இயங்கு தளத்திலும் iOS இயங்குதளத்திலும் உள்ள PickMeயானது விரைவில் வின்டோஸ் இயங்குதளத்திலும் அறிமுகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
PickMe தொழில்நுட்பமானது டிஜிட்டல் மொபிலிட்டி சொலியூஷன்ஸ் லங்கா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதுடன், அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜிப்ரி சுல்பரின் கீழ் செயற்பட்டு வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
5 hours ago