Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 02, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2015 நவம்பர் 12 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
Yarl IT Hub இனால் நடாத்தப்படும் Yarl Geek Challenge ஆனது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமான Yarl Geek Challenge இன் நான்காவது பருவகாலம், எதிர் வரும் 28ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது.
ஆரம்பத்தில் ஜூனியர் பிரிவுப் போட்டிகள், வட மாகாணத்தின் அனைத்து வலயங்களிலும் இடம்பெற்று, அதிலிருந்து அணிகள் தெரிவு செய்யப்பட்டு, நல்லூர், தியாகிகள் அறக்கொடை மண்டபத்தில் இரு நாட்கள் போட்டிகள் இடம்பெற்று மென்பொருள், வன்பொருள், திறன்பேசிச் செயலி என ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து Yarl Geek Challenge இன் பிரதான போட்டியான, சீனியர் பிரிவுப் போட்டிகளின் முதல் சுற்றுப் போட்டிகள், கடந்த கடந்த 6ஆம் 7ஆம் திகதிகளில் தியாகிகள் அறக்கொடை நிலைய மண்டபத்திலும் இறுதிநாள்ப் போட்டிகள் 8ஆம் திகதி யாழ்ப்பாணம் ஹற்றன் நஷனல் வங்கியின் கேட்போர் கூடத்திலும் ஹக்கதன் முறையிலும் இடம்பெற்றிருந்தன.
இந்த சீனியர் பிரிவுப் போட்டிகளுக்காக 40க்கு மேற்பட்ட அணிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த அணிகளுக்கு ஒரு வினாக்கொத்து வழங்கப்பட்டு, அதற்கு அவர்களின் பதில்கள் பெறப்பட்டு, அதிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 20 வரையான அணிகளே மேற்படி மூன்று நாள் போட்டிகளில் பங்கேற்றிருந்தன.
முதல் நாளின் போது ஒவ்வொரு அணிகளும் தம்மையும் தமது தயாரிப்புக்களையும் அறிமுகம் செய்திருந்தனர். அதனையடுத்து, ஒவ்வொரு அணிக்கும் வழிகாட்டுநர்கள் வழங்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து, நடுவர்கள், ஒவ்வொரு அணியுடனும் சாதாரணமாக கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து, கலாநிதி சங்கல்ப கவரிகேயின் அளிக்கையுடன் அன்றைய நாள் முடிவுக்கு வந்திருந்தது.
இரண்டாம் நாள் நிகழ்வுகள், Lankan Angel Network பற்றிய அறிமுக உரையுடன் ஆரம்பமாகியிருந்தது. இதில், தொழில் முயற்சியாண்மையாளர்களிடம் இருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து, எரிக், பிரஜீத், ருஹிந்து, பகீரதன் ஆகியோர் பங்குபற்றிய திறனாய்வுக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து, நடுவர் குழாமானது, ஒவ்வொரு அணியுடனும் 10 நிமிடங்கள், தனிப்பட்ட கலந்துரையாடலை நடாத்தியிருந்தனர். தொடர்ந்து, இரண்டாம் நாளின் இறுதி நிகழ்வாக, சோதனை செயற்பாட்டு விளக்கத்தை, ஒவ்வொரு அணியும் நிகழ்த்தியிருந்தன. இதில் நான்கு நிமிடங்கள் ஒவ்வொரு அணியும் செயற்பாட்டு விளக்கத்தை நிகழ்த்தியிருந்ததுடன், மூன்று நிமிடங்கள், அவர்களின் தயாரிப்புக்கள் பற்றி நடுவர் குழாமிடம் கேள்விகளை எதிர்நோக்கியிருந்தனர். இந்த சோதனையானது, குறிப்பிட்ட நேரத்தில் எதை அளிப்பது, நடுவர்களிடம் இருந்து எவ்வகையான கேள்விகளை எதிர்கொள்வது என்பது தொடர்பில் இறுதி நாளுக்கு, அணிகள் தயாராவதற்கு சிறந்த வாய்ப்பை வழங்கியிருந்தது.
அடுத்து பங்குபற்றும் அணிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற போராட்டத்துடைய நாளாக அமையப் போகின்ற இறுதி நாளில், ஏற்கனவே என்ன நடைபெறும் என்ற அறிமுகத்தை, இரண்டாம் நாளே அணிகள் பெற்றிருந்ததால், அணிகள் பதற்றம் இல்லாமல் பங்குபற்றியிருந்தன. எனினும், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருந்திருக்கவில்லை.
இதன்போது ஒவ்வொரு அணிகளும் தத்தமது வன்பொருள் சாதனங்களையும் திறன்பேசிச் செயலிகளையும் வியாபார இணையத்தளங்களையும் மதிய நேர இடைவேளை வரை காட்சிப்படுத்தியிருந்தன. அதன் பின்னர், ஜூனியர் பிரிவுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து எதிர்வரும் 28ஆம் திகதி டயலொக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் எந்தெந்த அணிகள் பங்கேற்கப் போகின்றன என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், SiRa, Bitmasters, Gideons, Arima, LOSERs, Titans ஆகிய ஆறு அணிகள் தெரிவாகியிருந்தன.
இதில், தீபிகா பாஸ்கரன், வினுஜன் சங்கரப்பிள்ளை, கே.செந்தாளன் ஆகியோரைக் கொண்டிருந்த Arima அணியானது, புகைப்பட பிரியர்களை இலக்காக கொண்டு, தமது Timeogaph தயாரிப்பை முன்வைத்திருந்தது. இவர்களின் தயாரிப்பின் மூலம், நீங்கள் நீண்ட காலத்துக்கு முன் எடுத்த புகைப்படமொன்றின் பின்னணணியிலேயே நிகழ்காலத்திலும் புகைப்படம் எடுப்பதற்குரிய வசதியை இவர்கள் தங்கள் தயாரிப்பின் மூலம் வழங்கியிருந்தனர்.
அதாவது, உதாரணமாக கர்ப்பிணித் தாயொருவர், பத்து மாதங்களிலும் தனது வளர்ச்சியை பதிவு செய்து கொள்ள விரும்போது, அவர், தனது முதல் மாதத்தில் எடுத்த அதே இடத்திலேயே மீண்டும் இரண்டாவது மாதமும் புகைப்படமும் எடுக்க விரும்போது இவர்களது தயாரிப்பானது முன்னர் எடுத்த புகைப்படத்தை காண்பிப்பதுடன், அதே பின்னணியையும் வழங்குகின்றது.
அடுத்து லக்மால் புத்திக, சானக லக்மால், தினுக சலாவதுர, மாதவ விதான பத்திரண, சதுஷா விஜேநாயக்கா ஆகியோரைக் கொண்ட Bitmasters அணியானது, AMPLUS எனப்படும் நுண்ணறிவு மிக்க டிஜிட்டல் விளம்பரப் பலகையை தமது தயாரிப்பாக முன் வைத்திருந்தது.
இவர்களது தயாரிப்பின் மூலம், ஒவ்வொரு விளம்பரப் பலகைகளும் ஒவ்வொரு கண்காணிப்பு கமெராவைக் கொண்டிருப்பதுடன் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவையாகவும் காணப்படும். இதன மூலம், குறிப்பிட்ட நேரத்தில், அனைத்து விளம்பரப் பலகைகயிலும் ஒரே விளம்பரத்தை காட்சிப்படுத்தக் கூடியவாறும் இருக்கும். தவிர, இதில் இருக்கும் கண்காணிப்புக் கமெரா மூலம், ஒவ்வொரு விளம்பரங்களையும் யார் பார்வையிடுகின்றனர், உண்மையாகவே விளம்பரங்களையும் பார்வையிடுகின்றார் என்ற பின்னூட்டங்களையும் பெற்றுக் கொள்ள முடியும் எனக் கூறபட்டுள்ளது.
அடுத்து, ஆர்.லயன்சன், எஸ்.சர்மிலன், எஸ்.அரவிந், சி.பானுஜன், எஸ்.பபித்ரா ஆகியோரைக் கொண்ட Gideons அணியானது, பிரதானமாக தமிழால் பேசுவதை சிங்களமாக மற்றும் அன்ட்ரொயிட் செயலியைத் தமது தயாரிப்பாக முன்வைத்துள்ளது. தவிர, Google Translatorஐ பயன்படுத்தி, ஏனைய ஐரோப்பிய மொழிகளின் மொழிபெயர்ப்புக்களை இச்செயலியில் சேர்க்கப் போவதாக தெரிவித்திருந்தனர்.
அடுத்து எஸ். குருபரன், யு.கீர்த்தனன், ஆர்.ஜதுஸன், ரூபிஷா ரூபநாதன் ஆகியோரைக் கொண்ட Losers அணியானது, வீடுகளிலும் ஏனைய இடங்களிலும் ஒவ்வொரு மின் சாதனங்களும் எவ்வளவு மின்னை நுகருக்கின்றன என்பதை அவர்கள் தயாரித்துள்ள சாதனத்தின் மூலம் கண்காணித்து, எவ்வாறு செயற்திறனான முறையில் மின் நுகரலாம் என்று கண்காணிக்கும் செயலியை வடிவமைத்திருந்தனர்.
அடுத்து, கே.ஜெ.டி திமுது லக்மால், கீத் மலின் சுகததாஸ, புத்தி ஆயிஷா ரத்நாயக்கா ஆகியோரைக் கொண்ட Titans அணியானது ஒவ்வொரு பஸ்களிலும் தாம் தயாரித்த சாதனங்களை பொருத்தி, அவை ஒவ்வொன்றும் எங்கு பயணிக்கின்றன என்பது தொடர்பாக கண்டறியும் “Find my Bus” எனும் செயலியைத் தயாரித்திருந்தனர். தவிர, குறிப்பிட்ட ஒருவர் இன்னொருவரிடம் பயணிக்கும்போது, அவர் எங்கு பயணித்துக் கொண்டிருக்கின்றார் என்பது தொடர்பில் தகவல் அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, இஷான் மதுஷங்க, நாலக ரஜமந்திரி, சமுதி கருணாரத்ன, ராஜித ராமாநாயக்கா, விமுக்தி பெரேரா ஆகியோரைக் கொண்ட SiRA அணியானது, உங்கள் திறன்பேசியில் உள்ள நாட்காட்டியையும், புவியியல் நிலையையும் பயன்படுத்தி, தன்னியக்கமாகவே நீங்கள் கூட்டத்தில் இருக்கும்போது உங்கள் திறன்பேசியை சத்தமின்றி ஆக்குவதோடு, அந்த நேரத்தில் உங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு தன்னியக்கமாகவே குறுஞ்செய்தியை அனுப்புவதோடு, மறுபடியும் கூட்டம் முடிந்த பின்னர், சாதாரண நிலைக்கும் செல்லும் வகையிலும் தமது தயாரிப்புக்களை வடிவமைத்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago