Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 16 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
Call of Duty கணனி விளையாட்டுத் தொடரின், அடுத்து வரவுள்ள Black Ops 3 இன் இறுதிக்கட்டத்துக்கு வழமைக்கு மாறாக நேரடியாகச் செல்ல முடியும் என அதன் உருவாக்குநர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, விளையாடுபவர்கள் விரும்பினால், ஒவ்வொரு கட்டம் கட்டமாக செல்லாது இறுதிக் கட்டத்துக்கு நேரடியாக செல்ல முடியும்.
இவ் விளையாட்டை விளையாடுபவர்களுக்கு, அவர்கள் விரும்புபவற்றைக் கொடுக்கும் நெகிழ்வுத்தன்மையை கொடுக்க விரும்புவதாக இவ்விளையாட்டை உருவாக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு படி முறையாகச் செல்வது பழமையான முறை என நேர்காணலொன்றின் போது, இவ்விளையாட்ட்டை உருவாக்கும் நிறுவன இயக்குனர் ஜேசன் பிளன்டெல் கூறியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி Call of Duty: Black Ops 3 வெளியிடப்பட்ட பின், விளையாடுபவர்கள் விரும்பினால் நேரடியாக இறுதிக் கட்டத்துக்கு செல்லலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தவிர, குறிப்பிட்ட ஆயுதங்களை குறிப்பிட்ட படிமுறைகளில் பெற்றிருக்காத பயனர்கள், ஏனைய பயனர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
9 minute ago
9 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
9 minute ago
30 minute ago