2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

'டிசம்பர் 21இல் உலகம் அழியாது...'

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிசம்பர் 21ஆம் திகதியில் உலகம் அழிந்துவிடும் என்று மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள செய்தியை ஆர்தர் சி. கிளார்க் நிலையம் நிராகரித்துள்ளது.

அமெரிக்காவின் நாஸாவும் உலக அழிவு எதிர்வுகூறலை மறுத்துள்ளது டிசம்பர் 21ஆம் திகதி, உலகம் இருளில் மூடிவிடும் என கூறப்படுவது அர்த்தமற்றது என மேற்படி நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அடிப்படைவாத மத அமைப்பொன்று டிசம்பர் 21இல் உலக அழிவுபற்றிய இறுவட்டொன்றை வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

சூரியனிலிருந்து சில சமயம் தீப்பிளம்புகள் மற்றும் சூரிய புயல் என்பன ஏற்படுவதுண்டு. இவற்றை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னரே அறிந்துகொள்ள முடியும் என ஆர்தர் சி. கிளார்க் நிலைய பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த உலகம் 2012இல் அழிய மாட்டாது. எமது கிரகம் 4 பில்லியன் வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. இவ்வாறான அச்சுறுத்தல்கள் இருப்பதாக உண்மையான விஞ்ஞானிகள் எவரும் கூறவில்லை என நாஸா கூறியுள்ளது.

குப்ரகங்கள் சில சமயம் பூமிக்கு அருகில் வருவதுண்டு. அவ்வாறு நடந்தாலும் பூமி மீது எந்தவித தாக்கமும் ஏற்படாது என நாஸா குறிப்பிட்டுள்ளது.
 
2012 – 2014 இடைப்பட்ட காலப்பகுதியில் சூரியனிலிருந்து தீப்பிளம்புகள் உண்டாக வாய்ப்புண்டு. இவற்றாலும் பூமி பாதிக்கப்பட மாட்டாது. சூரிய தீப்பிளம்புகள் சிலவேளை செய்மதி தொடர்பாடல்களைக் குழப்பலாம் என நாஸா கூறியுள்ளது.

இலங்கை வானில் பறக்கும் தட்டு காணப்பட்டதால் விமானப்படையை எச்சரிக்கையாக இருக்கும்படி ஆர்தர் சி. கிளார்க் நிலையம் கூறியதாக வெளியான செய்திகளையும் இந்நிலையம் மறுத்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • nafar Friday, 14 December 2012 03:26 PM

    நாளை உலகம் அழிவதாக இருந்தாலும் உன் கையில் ஒரு மரக்கன்று இருக்குமாயின் அதனை நீ நட்டுவிடு. ( நபிகள் நாயகம் )

    Reply : 0       0

    si mufeen Wednesday, 19 December 2012 04:03 AM

    எவன் ஒருவன் உண்மையாக நடக்கின்றானோ அவன் மரணத்திற்கு பயப்படத் தேவையில்லை.

    Reply : 0       0

    lorence Wednesday, 19 December 2012 05:54 PM

    எங்கள் சமயம் இதை ஏற்கவில்லை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .