Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 மார்ச் 16 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீங்கள் உங்களது அலைபேசியில், ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் ஒரே நேரத்தில் உரையாட விரும்புபவர்களாக இருந்தால், இச்செய்தியானது உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்குவதாய் அமையும்.
ஜப்பானைத் தளமாகக் கொண்ட தகவல் பரிமாற்றச் செயலியான LINE, தனது புதிய பதிப்பில் (ஐபோன் மற்றும் அன்ட்ரொயிட் 5.11ஆவது பதிப்பு, வின்டோஸ் 4.5ஆவது பதிப்பு), குழுக் கலந்துரையாடல் அழைப்புக்களிலிலும் குழுவாக தகவல் பரிமாற்றத்தையும் ஈடுபடும் வசதியையும் வழங்கவுள்ளது. இச்சேவையின் மூலம் 200 வரையானோருடன் குரல் கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் இச்சேவையானது, ஜப்பான், தாய்லாந்து, தாய்வான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளைத் தவிர்ந்து மற்றைய நாடுகளுக்கே இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. LINEஇன் 215 மில்லியன் மாதாந்த பயனர்களில் 67 சதவீதமானோர் இந்நாடுகளிலேயே இருக்கும் நிலையில் இவற்றுக்கு இச்சேவை பின்னரே அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நண்பர்கள், குடும்பத்தினர், சகபணியாளர்கள் தொடர்பிலிருக்கும் வகையில் குழுக் கலந்துரையாடல் சேவையாக 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் LINE அறிமுகப்படுத்தப்பட்டது. அதேவருடம் ஒக்டோபர் மாதம், இலவச குரல் அழைப்பு வசதியை LINE அறிமுகப்படுத்தியதுடன், 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதாம் காணொளி அழைப்பு வசதிகளையும் உள்ளடக்கியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
5 hours ago