2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

ஸக்கர்பேர்க்கின் சமூக வலைத்தள கணக்குகள் மீளக் கைப்பற்றப்பட்டன

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 07 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளத்தை மார்க் ஸக்கர்பேர்க் நடாத்துபவராக இருக்கலாம். எனினும், ஸக்கர்பேர்க்கினாலேயே, ஹக் செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாமற் போயிருக்கின்றது.

பேஸ்புக்கின் நிறுவுநரான ஸக்கர்பேர்க்கின், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், லிங்க்டின், பின்றஸ்ட் உள்ளடங்கலான தளங்களில் உள்ள கணக்குகள், கடந்த வாரயிறுதியில் குறிப்பிட்ட நேரத்துக்கு ஹக் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேற்கூறப்பட்ட ஹக்கிங்குக்கு, டுவிட்டரில், 40,000க்கு மேற்பட்ட பின்தொடருபவர்களைக் கொண்டுள்ள Ourmine எனும் ஹக்கர் குழு உரிமை கோரியுள்ளது. டுவீட் ஒன்றின் மூலம் மேற்படி ஹக்கிங்க்கு உரிமை கோரிய அக்குழு, தங்களை தொடர்பு கொள்ளுமாறு கூறியிருந்தது.

எவ்வாறெனினும், பேஸ்புக்கினால் ஆளப்படும் புகைப்பட பகிர்வுச் சேவையான இன்ஸ்டாகிராமில், ஸக்கர்பேர்க்கின் கணக்கு கையாளப்படுவதை பேஸ்புக்கின் பாதுகாப்பு systemகள் தடுத்ததாகக் கூறப்பட்டுள்ளதோடு, டுவிட்டர், பின்றஸ்ட் கணக்குகள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக பேஸ்புக்கின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 2012ஆம் ஆண்டு லிங்டினில் மேற்கொள்ளப்பட்ட ஹக்கிங்கினால், 117 மில்லியன் லிங்டின் பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொல்கள் களவாடப்பட்டமை காரணமாகவே, மேற்கூறப்பட்ட ஹக்கிங் நிகழந்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .