2024 நவம்பர் 02, சனிக்கிழமை

விளம்பரங்களைத் தடுக்கும் செயலிகளுக்கு அனுமதி

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 10 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூகிளின் அன்ட்ரொயிட் இயங்குதள செயலித் தொகுதியான கூகிள் பிளேயில் விளம்பரங்களைத் தடுக்கும் செயலிகளுக்கு முன்னர் தடை விதித்த கூகிளானது, தனது முன்னைய முடிவை மாற்றியுள்ளதாக தெரியவருகிறது.

முன்னர், Adblock Fast போன்ற செயலிகளை கூகிள் பிளேயிலிருந்து நீக்கியிருந்ததுடன், கிறிஸ்டலின் ad blockerகளுக்கான இற்றைப்படுத்தல்களையும் கூகிள் பிளேயில் கூகிள் நிறுத்தியிருந்தது.

இந்நிலையிலேயே, Adblock Fastஇன் தயாரிப்பாளர்களான Rocketshipஇன் முறைப்பாட்டைத்தொடர்ந்து, Adblock Fast செயலியினை கூகிள் பிளேயில் மீள அனுமதிப்பதற்கு கூகிள் இணங்கியுள்ளது.

இந்நிலையில் கூகிளின் மேற்படி முடிவானது, அன்ட்ரொயிட் சாதனங்களுக்கான தனது செயலித் தொகுதியான கூகிள் பிளேயில், எவ்வகையான செயலிகளை அனுமதிப்பது என்பது தொடர்பிலான கூகிளின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

தமது செயலியின் இற்றைப்படுத்தல் நிராகரிக்கப்பட்ட தினமான கடந்த வாரம் திங்கட்கிழமை (01), முறைப்பாட்டை மேற்கொண்டதாகத் தெரிவித்த Rocketship, மறுநாள் செவ்வாய்க்கிழமை (02), கூகிள் பிளேயிலிருந்தே செயலி நீக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (05), முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக, கூகிளிலிருந்து மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை (09), செயலி, கூகிள் பிளேயிலிருந்ததாகவும் Rocketship தெரிவித்துள்ளது.

இது தவிர, புதிய இற்றைப்படுத்தலுடன் 1.1.0 பதிப்பை Rocketship வெளியிட்டுள்ளது. இந்த புதிய பதிப்பானது அன்ட்ரொயிட்டின் 4.0 பதிப்புக்கு ஒத்துழைப்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .