Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 02, சனிக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிக பாவனையில் இருக்கும் பெற்றோல், டீசல், நிலக்கரி, மண்ணெண்ணை போன்ற எரிபொருட்களை வேறு வகையில் எவ்வாறு உற்பத்தி செய்வது என்பது தொடர்பில் பல காலமாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஆனால், இவற்றை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் மதுபானத்தை எவ்வாறு உற்பத்தி செலவின்றி பெற்றுக்கொள்ள முடியும் என்பதையே கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது, லவ்ஜோய் என்ற வால்நட்சத்திரமொன்று சுமார் 500 போத்தல்களில் நிரப்பக்கூடிய மதுபானததை ஒரு நொடிக்கு பொழிந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மதுபானத்தை தயாரிக்க பயன்படுத்தப்படும் திரவத்தை, லவ்ஜோய் வால்நட்சத்திரம் வானில் பீய்ச்சி அடிப்பதாக, பிரான்ஸ்ஸில் அமைந்துள்ள வானிலை ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமி உருவாகும் போது சிதறிய துகள்கள் தான் வால்நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, வால்நட்சத்திரங்களை ஆய்வு செய்வதன் மூலம் பூமியின் தோற்றம் பற்றிய மர்மத்தை கண்டுபிடிக்கமுடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
லவ்ஜோய் வால்நட்சத்திரத்தில் இந்த திரவம் மட்டுமல்லாது, மேலும் 20 விதமான மூலக்கூறுகளும் கண்டறியப்பட்டுள்ளனவாம். பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கான அடிப்படை மூலக்கூறுகள் வால்நட்சத்திரங்களில் இருந்து கிடைத்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago