2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

வால்நட்சத்திரத்தில் ஐஸ் கட்டியாமே

Gavitha   / 2016 ஜனவரி 20 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் 'ரோசட்டா' என்ற விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் அந்த விண்கலம் 'மரபி' என்ற வால் நட்சத்திரத்தை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது.

அந்தப் புகைப்படத்தில் உள்ள வால்நட்சத்திரத்தின் அடிப்பகுதியில்,  ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வால்நட்சத்திரத்தின் அடிப்பகுதியில் ஐஸ்கட்டி இருப்பது மிகவும் பிரகாசமாகத் தெரிகின்றது. இத்தகவலை கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு ஆய்வகத்தின் விண்வெளி ஆராய்ச்சியாளர் மூர்த்தி குடிபதி என்றவொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக 'மரபி' வால் நடசத்திரம் மிகவும் இருட்டாக காணப்படும். அது சூரியனை நோக்கி பறந்துச் சென்ற போது, சூரியனது வெப்பத்தில் அந்த ஐஸ்கட்டி தற்போது ஆவியாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .