2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வேகமான வை-ஃபையை இந்தியாவில் சோதித்தது பேஸ்புக்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வை-ஃபை சேவையொன்றினை, இந்திய இணைய சேவை வழங்குநர்களுடன் சோதிப்பதில் ஆரம்ப கட்டங்களில் இருப்பதாக பேஸ்புக் உறுதிப்படுத்தியுள்ளது.

வேகமான வை-ஃபையானது, இணையத்தினைப் பெறும் பொருட்டு, உள்ளூர் இணைய சேவை வழங்குநர்களிடமிருந்து இணையத்தைப் பெற்றுக் கொள்ளுவதற்கு அனுமதிக்கின்றது.

மேற்கூறப்பட்ட வேகமான வை-ஃபையின் வெள்ளோட்டச் சேவையானது, அரசால் இயக்கப்படும் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, கிராமப்புறத்தின் 125 இடங்களில் வை-ஃபை நிலையங்களை அமைத்துள்ளது.

இந்நிலையில், பல்வேறுபட்ட உள்ளூர் இணைய சேவை வழங்குநர்களுடன் இணைந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையொன்றில் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கருத்துத் தெரிவித்த ஆய்வாளர் ஒருவர், பேஸ்புக்கினுடைய முன்மொழிவின் மூலம் இணையத்தினை முதன் முதலில் பயன்படுத்தும் பயனர்கள், போட்டியாளர்களாகவதை விட பெரும்பாலும் சமூக வலைத்தள பயனர்களாக மாறுவார்கள் என பேஸ்புக் நம்புகின்றது என்று கூறியுள்ளார்.

எவ்வாறெனினும், பேஸ்புக்கினுடைய இலவச அடிப்படை இணைய சேவைச் செயலியானது இவ்வருட ஆரம்பத்தில், இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்துநர்களினால் இவ்வருட ஆரம்பத்தில் தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தெரிவு செய்யப்பட்ட சில இணையத்தளங்களுக்கு மட்டுமே இலவசமாக செல்லக் கூடிய நிலையிலிருந்த திட்டங்களுக்கு, இணைய சமத்துவத்துக்கு சார்பாக வழங்கப்பட்ட தீர்ப்பானது பலத்த அடியாய் அமைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .