2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

வீட்டை கண்காணிக்க வருகிறது அமேசனின் `அஸ்ட்ரோ`

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டைக் கண்காணிக்கும் புதிய வகை ரோபோவொன்றை  அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அஸ்ட்ரோ  (Astro) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, நாய்க்குட்டியின் உருவத்தை ஒத்துக் காணப்படுகின்றது. தன்னியக்கமாகச் செயற்படும் இவ் ரோபோவானது கூகுளின் அலெக்சாவுடன் இணைக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவுடன் வீடு முழுதும் சுற்றி வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் தானாக நகருவதுடன், பார்க்கவும், கேட்கவும், நமது கட்டளைகளை உணர்ந்து அதற்கேற்ப செயல்படவும் இதனால் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அஸ்ட்ரோவிடம் உள்ள திரை மூலம் நாம் வெளியில் இருந்தவாறே வீட்டைக் கண்காணிக்க முடியும் என்பதும் இதன் ஆரம்ப விலை ஆயிரம் டொலர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .