2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

யூட்யூப்பின் விரும்பப்படாத ஒன்றாக Call of Duty ட்ரெயிலர்

Shanmugan Murugavel   / 2016 மே 11 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபலமான Call of Duty காணொளி விளையாட்டின் இறுதிப் பதிப்பின் ட்ரெயிலர் ஆனது யூட்யூப் வரலாற்றில் அதிகம் விரும்பப்படாத காணொளியாக மாறியுள்ளது.

Call of Duty: Infinite Warfare என்ற மேற்படி காணொளி விளையாட்டிற்கு எதிர்மறையான பிரதிபலிப்புகளை இரசிகர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஒன்பது நாட்களில் 1.6 மில்லியனுக்கு மேலதிகமான விரும்பப்படவில்லை என்ற பதிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனினும் ஓட்டுமொத்தமாக இந்த ட்ரெயிலர் ஆனது 17 மில்லியனுக்கு அதிகமான தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.

மேற்படி விருப்பமில்லாத எண்ணிக்கை ஆனது, யூட்யூப்பில், ட்ரெயிலர் அல்லது ஊக்குவிப்புக் காணொளிக்கு கிடைத்த அதிக விருப்பமில்லாத எண்ணிக்கை ஆகும். எவ்வாறெனினும் ஜஸ்டின் பீபரின் இசைக் காணொளியான பேபி கொண்டிருக்கும் 6.1 மில்லியன் விரும்பத்தகா பதிவுகளையும் ரீபெக்கா பிளக்கின் பிறைடேயின் இரண்டு மில்லியனுக்கு அதிகமான விரும்பப்படாத பதிவுகளை விட குறைவாகவே உள்ளது.

ஒவ்வொரு வருடாந்த தவணையிலும் மில்லியன் கணக்கான பிரதிகளை விற்கும், உலகில் அதிகம் காணொளி விளையாட்டுக்கள் விற்பனையாகும் Call of Duty, இவ்வாறான பிரதிபலிப்பை இதுவரையில் காணவில்லை என்று தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .