2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

மன அழுத்தத்தைக் கண்டறியும் அப்பிள்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 24 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


அப்பிள் தொலைபேசியில் மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் கண்டறியும் அம்சம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் ‘I phone 13‘ மற்றும் ‘iphone 13 மினி‘ தொலைபேசிகளை அந்நிறுவனத்தின் தலைமைச் செயற்பாட்டு அதிகாரி டிம் கும் அறிமுகம் செய்துள்ளார்.

தற்போதுள்ள தொழில்நுட்பத்தைக் காட்டிலும் இவ் வகைத் தொலைபேசிகளிலுள்ள கெமராவில் புதிய சிறப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்ட அப்பிள் 13 சீரிஸானது விற்பனையில் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பிரபல மருந்து நிறுவனமான biogen ஆகியவை இணைந்து முகத்தை மட்டும் ஸ்கேன் செய்தால் பயனர்களின் மன அழுத்தத்தைக் கண்டறியும் புதிய நவீன தொழில்நுட்பத்தைத் தயாரித்து வருவதாகத் வெளியாகியுள்ள தகவல் அப்பிள் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X