Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 02, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 09 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதுள்ள தொழில்நுட்ப போக்குகளுக்கு தானும் ஈடுகொடுக்கும் முகமாக சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக்கானது புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
பேஸ்புக்கின் பயனர்கள், பேஸ்புக்கில் நேரடி காணொளி ஒளிபரப்புச் செய்யும் வசதியையும் தொகுப்புக்களாக புகைப்படங்களையும் காணொளிகளை தொகுக்கும் வசதியையும் பேஸ்புக்கில் இருக்கும் பக்கங்கள் எவ்வளவு வேகமாகப் பதிலளிக்கின்றன என்பதைக் கண்காணிப்பது போன்ற வசதிகளை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐபோன் பயன்படுத்தும் அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் பயனர்களில் சிறிய சதவீதமானோருக்கே, பேஸ்புக்கில் நேரடி காணொளி ஒளிபரப்பும் சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் காலப்போக்கில் இந்தச் சேவையானது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என பேஸ்புக் தெரிவித்துள்ள போதும், எப்போது மிகுதிப் பயனர்களுக்கு இந்தச் சேவை கிடைக்கும் என குறிப்பிட்டு தெரிவித்திருக்கவில்லை.
இந்த நேரடி ஒளிபரப்புச் சேவையின்போது, அந்தக் காணொளியை நேரடியாக எத்தனை பேர் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் அந்த நேரத்தில் குறிப்பிட்ட காணொளிக்கு என்ன கருத்துக்கள் கிடைக்கப் பெறுகின்றன என்பதை குறிப்பிட நேரடி ஒளிபரப்புச் சேவையை செய்யும் பயனர் பார்வையிட முடியும் என்பதுடன், குறிப்பிட்ட நேரடிக் காணொளிச் சேவை முடிந்தவுடன் அந்தக் காணொளியானது, குறிப்பிட நேரடி ஒளிபரப்புச் சேவையை செய்யும் பயனரின் பக்கத்தில் சேமிக்கப்படும். தவிர, நேரடி காணொளி ஒளிபரப்பை மேற்கொள்ளும் நபர், எவர், இந்தக் காணொளியை பார்வையிடுபவர்கள் என்பதை மட்டுறுத்தலாம்.
எனினும், மேற்படிச் சேவையானது தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரபலங்களாலும் உயர் மட்ட பயனர்களாலும் சில மாதங்களாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த வருடத்தில் பெரிய தொழில்நுட்ப போக்குகளில் ஒன்றான அலைபேசி வழியாக நேரடி ஒளிபரப்பு சேவை விளங்குகின்ற நிலையில், டுவிற்றரினால் நிர்வகிக்கப்படும் Periscope, Meerkat என்பன இச்சேவையில் பிரபலமாகியிருந்தன. தவிர, நேரடி ஒளிபரப்பு கணனி விளையாட்டுத் தளமான Twitchஐ ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியிருந்தது.
தவிர, பேஸ்புக்கானது அதன் பயனர்கள் தொகுதிகளாக புகைப்படங்களையும் காணொளிகளையும் பகிர்வதற்கான புதிய முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதேவேளை, பேஸ்புக்கில் தற்போது செயற்பாட்டு நிலையில் 50 மில்லியன் பக்கங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு பக்கமும் அதில் வழங்கப்படும் கருத்துகளுக்கு எவ்வளவு நேரத்தில் பதில்களை வழங்கப்படுகின்றது என்று பேஸ்புக் வெளிக்காட்டவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago