Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 மே 03 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேஸ்புக் நிறுவனத்தின் வட்ஸ்அப்பை 72 மணித்தியாலங்களுக்கு பிரேஸில் பூராவும் தடை செய்யுமாறு கம்பியற்ற அலைபேசி வழங்குநர்களுக்கு அந்நாட்டு நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி தடையானது, கடந்த ஐந்து மாதங்களில், பிரபலமான தகவல் பரிமாற்றச் சேவையான வட்ஸ்அப்புக்கு கிடைக்கப்பெற்ற இரண்டாவது சந்தர்ப்பம் ஆகும்.
பிரேஸிலின் வடகிழக்கு மாநிலமான சேர்ஜிபேயில் உள்ள நீதிபதியொருவரால் விதிக்கப்பட்ட மேற்படி தடையானது, பிரேஸிலின் பிரதான ஐந்து கம்பியற்ற அலைபேசி வழங்குநர்களுக்கு செல்லுபடியாகையில், இது, பிரேஸிலிலுள்ள வட்ஸ்அப்பின் 100 மில்லியனுக்கு அதிகமான பயனர்களைப் பாதிக்கவுள்ளது.
எவ்வாறெனினும் என்ன காரணத்துக்காக தடை விதிக்கப்படுகிறது என்ற காரணம், சேர்ஜிபே மாநில நீதிமன்றத்தில் தற்போது நடைபெறுகின்ற வழக்கின் சட்டப் பாதுகாப்புக்காக வெளிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள வட்ஸ்அப், மேற்படி தீர்மானம் தொடர்பில் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தம்மால் இயன்றளவு நீதிமன்றதுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. தவிர, தம்மிடம் இல்லாத தகவலை அளிக்குமாறு கட்டாயப்படுத்துவதற்காக, தொடர்பாடல்களுக்காகவும் வியாபாரங்களுக்காகவும் தம்மைத் தங்கியுள்ள 100 மில்லியனுக்கு அதிகமான பயனர்களை மேற்படி முடிவு தண்டிப்பதாக வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
5 hours ago