Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூன் 10 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை ஊக்குவிப்பதற்காகவும் கணினியின் உதவியுடன் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை ஊக்குவிப்பதற்காகவும் Yarl IT Hub என்ற தன்னார்வலர் நிறுவனத்தால் நடாத்தப்பட்டு வரும் Yarl Geek Challenge ஜூனியர் போட்டியின் இவ்வருடத்துக்கான வலய மட்ட மதிப்பீடுகள், நாளை சனிக்கிழமை (11) இடம்பெறவுள்ளன.
கடந்த வருடத்தைப் போலவே, இம்முறையும் வட மாகாணக் கல்வித் திணைக்களத்துடன் நடாத்தப்படவுள்ள இப்போட்டிக்கு 165 வரையிலான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அந்தவகையில், வடமராட்சி மற்றும் தென்மராட்சி வலயங்களுக்கான மதிப்பீடுகள், புலோலி கணினி வள நிலையத்தில் இடம்பெறவுள்ளதுடன், யாழ்ப்பாணம், வலிகாமம் வலயங்களுக்கான மதிப்பீடுகள், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெறவுள்ளதுடன், தீவக வலயத்துக்கான மதிப்பீடு, புலோலி கணினி வள நிலையத்தில் இடம்பெறவுள்ளதோடு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் வலயங்களுக்கான மதிப்பீடு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெறவுள்ளதுடன், வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, மன்னார், மடு வலயங்களுக்கான மதிப்பீடு, வவுனியா தெற்கு கணினி வள நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
3 hours ago
3 hours ago