2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

தற்போது வட்ஸ்அப் இலவசம்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 22 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில வருடங்களாக, முதல் பன்னிரண்டு மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும் வட்ஸ்அப்பானது, அதற்குப் பின்னர், சேவையைப் பெறுவதற்கு, வருடாந்தம் சந்தா செலுத்த வேண்டும் என இருந்தது. இந்நிலையிலேயே, மேற்படி வருடாந்த சந்தாக் கட்டணம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நீக்கப்பட்டுள்ளதாக வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

தற்போது வரை, முதல் பன்னிரண்டு மாதங்களுக்குப் பின்னர், வருடத்துக்கு, 0.69 அமெரிக்க டொலர் அறவிடப்படுகையில், நீங்கள், மேற்படிக் கட்டணத்தை ஏற்கெனவே செலுத்தியிருந்தால், அதைத் திரும்பிப் பெறமுடியாது.

மேற்படி, வருடாந்த சந்தாக் கட்டணமானது, நீக்கப்பட்டபோதிலும், வருமானமீட்டக்கூடிய வகையில் தாம் இருப்பதாக தெரிவித்துள்ளபோதிலும், இதன் காரணமாக, நீங்கள், விளம்பரங்களைக் காணத் தொடங்குவீர்கள் என கருதத்தேவையில்லை என வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

ஒரு பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள, பேஸ்புக்கினால் நிர்வகிக்கப்படும் வட்ஸ்அப்பானது, மேற்படி, வருடாந்த சந்தாவை நீக்கும் வலைப்பூ செய்தியில், பல வருடங்களாக, முதலாவது வருடத்தையடுத்து, வட்ஸ்அப்பை பயன்படுத்த, சிலரைக் கட்டணம் செலுத்துமாறு வினவியதாகவும், ஆனால் நாங்கள் வளர்ச்சியடைந்த்துள்ள நிலையில், இந்த நடைமுறை, சரியாகவில்லையெனவும், பல வட்ஸ்அப் பயனர்களிடம், டெபிட் அட்டைகளோ அல்லது கடனட்டைகளோ இல்லையெனவும், இதனால், முதல் வருடத்துக்குப் பின்னர், அவர்கள், அவர்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் தொடர்புகளை இழக்கும் அபாயம் காணப்படுவதாகவும், எனவே அடுத்த சில வாரங்களில், வெவ்வேறு பதிப்புகளில் உள்ள வட்ஸ்அப்பினது, சந்தாவை இரத்துச் செய்வதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வருடத்திலிருந்து, வட்ஸ்அப்பிலிருந்து, நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் வர்த்தகம் மற்றும் நிறுவனங்களோடு தொடர்பு கொள்ளும் வசதி சோதிக்கப்படுகிறது. இந்த வசதி மூலம், நீங்கள் உங்கள் வங்கியுடன் தொடர்பு கொண்டு, நீங்கள் இறுதியாக மேற்கொண்ட பணப்பரிமாற்றத்தை அறிய முடியுமென்பதுடன், நீங்கள் பயணிக்கும் விமான நிறுவனத்திடமிருந்து, உங்களது, விமானம் தாமதமானால், தகவலை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .