Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 02, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜனவரி 14 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளாவிய ரீதியில் தனிநபர்க் கணனிகளுக்கான தேவையில் வீழ்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வருடத்தின் நான்காவது காலாண்டுப் பகுதியில், தனிநபர்க் கணனிக்கான விநியோகமானது, 10.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஐ.டி.சி தெரிவித்துள்ளது.
மேற்படி, கடந்தாண்டின் நான்காவது காலாண்டுப் பகுதியில், 71.9 மில்லியன் தனிநபர்க் கணனிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில், முக்கியமான கிறிஸ்மஸ் கொள்வனவு காலமும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. தனிநபர்க் கணனிகளின் விநியோகத்தை கண்காணிக்கத் தொடங்கிய பின், மேற்படிக் காலப்பகுதியிலேயே, தனிநபர்க் கணனிக்கான விநியோகத்தில், இவ்வளவு குறைவான வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐ.டி.சி தெரிவித்துள்ளது. ஐ.டி.சிஇன் தரவுகளின்படி, தொடர்ச்சியாக ஐந்தாவது காலாண்டாக தனிநபர்க் கணனிகளின் விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளது.
திறன்பேசிகள் மற்றும் டப்லெட்களின் போட்டி காரணமாகவும் தனிநபர்க் கணனிகளின் நீண்ட ஆயுட்காலம் காரணமாகவே தனிநபர்க் கணனிகளின் கேள்வி, வீழ்ச்சியடைந்துள்ளது.
பிறிதொரு ஆராய்ச்சி நிறுவனமான கார்ட்னரும், தனிநபர்க் கணனிகளின் விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளபோதும், அவர்களது வித்தியாசமான கணிப்பு முறையில், கடந்த வருடத்தின் நான்காவது காலாண்டுப் பகுதியில், தனிநபர்க் கணனிகளின் விநியோகமானது, 8.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கடந்தாண்டின் நடுப் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட வின்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவனங்கள் நிறுவ முற்படுகையில், இவ்வருடம், தனிநபர்க் கணனிகளின் விற்பனை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல் ஐந்து தனிநபர்க் கணனி தயாரிப்பாளர்களில், கடந்த வருடத்தில் அப்பிள் மட்டுமே ஆறு சதவீதத்துக்கு அதிகமான விநியோக அதிகரிப்பை கொண்டிருந்தததுடன், ஏசரின் விநியோகமானது 18 சதவீதத்க்கு அதிகமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
எனினும் சந்தையில், சீனத் தொழில்நுட்ப ஜாம்பவானான லெனோவா, 20 சதவீதத்துக்கு அதிகமான விநியோகத்தை மேற்கொண்டு முதலிடத்தில் இருப்பதுடன், இரண்டாமிடத்தில் ஹெச்.பியும் மூன்றாமிடத்தில் டெல்லும் நான்காமிடத்தில் அப்பிளும் அஸூஸும் இருக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago