Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2015 நவம்பர் 03 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த செவ்வாய்க்கிழமை (03) சமூக வலைத்தளமான டுவிட்டருக்கு சென்றிருந்த பலர் மாற்றமொன்றை அவதானித்திருக்கலாம். ஆம், தலைப்பில் உள்ளபோது அன்று முதல் டுவிட்டரில் இதயம் அறிமுகமாயிருந்தது. இந்த மாற்றம் பலரால் விரும்பப்பட்டதாக இருக்கலாம்.
இதுவரை காலமும் டுவிட்டரில் பதியப்படும் டுவிட்டுக்கு காணப்பட்ட favoritesக்கு காணப்பட்ட iconஆன நட்சத்திரத்தை இதயமாக மாற்றுவதாக அறிவித்துள்ள டுவிட்டர் நிறுவனம், அதை likes என அழைக்கப் போவதாக கூறியுள்ளது.
டுவிட்டரை பயன்படுத்துவதை இலகுவாக்கும் பொருட்டே இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த டுவிட்டர் நிறுவனம், சில நேரங்களில் நட்சத்திர icon குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், முக்கியமாக புதிதாக டுவிட்டரை பயன்படுத்துவோர் இடர்பாடுகளைச் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளது. நீங்கள் பலவற்றை விரும்பலாம் (like) ஆனால் அனைத்தும் உங்கள் விருப்பமாக (favorite) இருக்காது என மேலும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொழிகள், கலாசாரங்கள், நேர வலயங்களைக் கடந்து உலகளாவிய சின்னமாக இதயம் விளங்குவதாகவும், இதயம் மூலம் பல வகையான உணர்ச்சிகளை வெளிக்காட்ட்க் கூடியதாக உள்ளதாகவும், இலகுவாக ஒருவருடன் ஒருவர் இணையக் கூடியதாகவும் இருப்பதாக தெரிவித்த டுவிட்டர், தமது சோதனையின் போது பலர் இதை விரும்பியதாகவும் கூறியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (03) முதல் இதயமானது, டுவிட்டரின் இணையத்தளத்திலும், TweetDeckஇலும், iOS, அன்ட்ரொயிட், விண்டோஸ் 10 இயங்குதள செயலிகளிலும், Vineஇன் இணையத்தளத்திலும் அன்ட்ரொயிட் செயலியிலும் காட்சியளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. விரைவில் iOS இயங்குதள Vine இலும், Mac இயங்குதள டுவிட்டரிலும் காட்சியளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
நீங்கள் அடுத்த முறை டுவிட்டருக்கு செல்லும்போது இதயத்தின் மீது அழுத்தி என்ன மாற்றம் இடம்பெறுகின்றது கண்டுகளியுங்கள்.
சமூக வலைத்தள ஜாம்பவான பேஸ்புக்கில் likeக்காக காணப்படும் icon ஆன பெருவிரலை உயர்த்திக்காட்டும் அடையாளமே பரவலாக சமூக வலைத்தள உலகில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் டுவிட்டரின் இதயம் எவ்வகையான மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago