Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 24 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நக்கிச் சுவைக்கும் விதத்தில் ஒரு புதிய திரையை ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
டேஸ்ட்-தி-டிவி என்றழைக்கப்படும் இந்த தொலைக்காட்சியின் திரை மீது ஹைஜீன் ஃபிளிம் (சுகாதாரமான பிலிம்) என்றழைக்கப்படும் ஒரு வித பிளாஸ்டிக் படச்சுருள் விரிக்கப்பட்டு, அதன் மீது 10 ரக சுவை நிறைந்த ஸ்பிரே தெளிக்கப்படும்.
இந்த ரக தொலைக்காட்சிகளைக் கொண்டு, சமையல் கலைஞர்களை அல்லது வொயின் நிபுணர்களை தொலை தூரத்தில் இருந்து கொண்டு பயிற்றுவிக்கலாம் என ஜப்பான் நாட்டின் மேஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹோமி மியஷிடா கூறினார்.
இந்த தொலைக்காட்சிகளை வணிக ரீதியில் தயாரிக்கத் தொடங்கினால் ஒரு டிவியை தயாரிக்க 875 அமெரிக்க டாலர் ஆகும் என்றும் மதிப்பிட்டுள்ளார்.
"வீட்டில் இருந்தபடியே உலகின் மறுமுனையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடுவது போன்ற அனுபவத்தைச் சாத்தியப்படுத்துவது தான் இந்த தொழில்நுட்பத்தின் இலக்கு" என அவர் ராய்டர்ஸ் முகமையிடம் கூறினார்.
இந்த சுவை நிறைந்த ஸ்பிரே தெளிக்கும் தொழில்நுட்பத்தைத் கொண்டு வேறு என்னவெல்லாம் செய்ய முடியும், இதன் சாத்தியக் கூறுகள் என்ன? என்பது குறித்து உற்பத்தியாளர்களோடு பேசி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. உதாரணத்துக்கு டோஸ்ட் சுவையைக் கூட்டுவதைக் குறிப்பிடலாம்.
கணினியில் பதிவிரக்கம் செய்யும் வகையில் ஒரு சுவை உலகத்தையே உருவாக்க முடியும் என்கிறார் பேராசிரியர் ஹோமி மியாஷிடா.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், மக்கள் இது போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் வெளி உலகத்தோடு தொடர்பு கொள்வதை மேம்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு மத்தியில் இப்படி ஒரு தொழில்நுட்பம் தேவைதானா? டேஸ்ட்-தி-டிவியை இப்போது வெளியிடுவது சரியா? என ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு டிவிட்டர் பயனரோ "கொரோனா காலகட்டத்தில் வெளியிட வேண்டிய முக்கிய கண்டுபிடிப்பு தான்" என நகைச்சுவையாகப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு முன்பும் பேராசிரியர் ஹோமி மியாஷிடா மற்றும் அவரது மாணவர்கள் சுவை சார்ந்து பல சாதனங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் உணவின் சுவையைக் கூட்டும் முள் கரண்டியும் (Fork) அடக்கம்.
பத்திரிகையாளர்களுக்கு ஒரு மாணவர் இந்த சுவைத்துப் பார்க்கும் தொலைக்காட்சிப் பெட்டியைக் குறித்து விவரித்தார். அப்போது, அப்பெண் மாணவர் தனக்கு சாக்லேட் வேண்டும் என தொலைக்காட்சியிடம் கூறினார். சில முயற்சிகளுக்குப் பிறகு, பிளாஸ்டிக் படச்சுருளில் சாக்லேட் தெளிப்பு நிகழ்த்தப்பட்டது. அதைச் சுவைத்துப் பார்த்து, "இது பாலில் தயார் செய்யப்பட்ட சாக்லேட்டைப் போல உள்ளது" என அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. (நன்றி பி.பி.சி)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago