Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 06 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிக் டாக்குக்கு மாற்றாக களம் இறங்கி இந்திய செயலியான சிங்காரியை வெளியான 22 நாட்களில் 1 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
தொடர்ந்து, கூகுள் பிளே ஸ்டோரில் ஒரு வாரத்திற்கும் மேலாக முன்னணியில் உள்ள முதல் இரண்டு இலவச செயலிகளில் ஒன்றாக உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னதாக, சிங்காரி 25 லட்சம் பதிவிறக்கங்களை மட்டும் கடந்த நிலையில், இந்தியாவில் டிக்டோக் தடை காரணமாக தொடர்ந்து பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
டிக்டாக் மீதான தடை அறிவிக்கப்பட்ட உடனேயே இந்த பயன்பாடு 30 நிமிடங்களுக்கு 10 இலட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் காண்கிறது என்று செயலியின் இணை நிறுவனர் சுமித் கோஷ் தெரிவித்துள்ளார்.
சிங்கரி செயலியை கூகிள் பிளே ஸ்டோரில் மொத்தம் 1.1 கோடி பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது. டிக் டாக் தடை செய்யப்பட்டதிலிருந்து, இந்திய மாற்று செயலி மீதான, ஆர்வம் திடீரென அதிகரித்துள்ளது.
இதனால், வெறும் 10 நாட்களில் 30 லட்சம் பதிவிறக்கங்களின் மைல்கல்லை எட்டியதாகவும், ஒரு முறை வெறும் 72 மணி நேரத்தில் 500,000 பதிவிறக்கங்களைக் கண்டதாகவும் நிறுவனம் குறிப்பிடுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago