2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

சாரதியில்லாத கார்களுக்காக ஊபருடன் கூகுள் கைகோர்ப்பு

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 28 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தானாக இயக்கப்படும் கார்களை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு தேவையான ஒழுங்கு விதிமுறைகளை அடையும் பொருட்டு, தேடல் இயந்திர ஜாம்பவானான கூகுள், கார் தயாரிப்பாளர்களுடனும் வாடகைக் கார் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.

சில சட்டத்தடைகளை நீக்கும் பொருட்டு சட்டமியற்றுநர்களையும் ஒழுங்குமுறைப்படுத்துபவர்களினது ஆதரவை ஃபோர்ட், வொல்வோ, ஊபர், லைஃப்ட் உள்ளடங்கலான கூட்டணி தேடவுள்ளது.

மேற்படி கூட்டணியின் பேச்சாளராக, ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அதிகாரி டேவிட் ஸ்‌றிக்லான்ட் பணியாற்றவுள்ளார்.

இதேவேளை, சாரதியில்லாத கார்களின் நன்மைகள் பற்றி கூறி பொதுமக்களை திருப்திப்படுத்துவதையும் இந்தக் கூட்டணி இலக்காகக் கொண்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பையும் வயதானவர்கள் மற்றும் அங்கவீனர்களின் நடமாட்டத்தையும் சுற்றுச் சூழலின் தரத்தையும் நவீன போக்குவரத்து செயற்திறனையும் தானாக இயங்கும் தொழில்நுட்பமானது மேம்படுத்துவதாகவும் போக்குவரதுக்கு நெருக்கடியைக் குறைப்பதாகவும் மேற்படி கூட்டணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஒழுங்கு விதிமுறைகளின்படி முழுமையான தானியங்கி வாகனங்கள் சட்ட ரீதியற்றவை என்பதுடன் சுக்கான், பெடல், அவசரகால நிலைமைகளில் வாகனத்தைச் செலுத்தக்கூடிய வாகன ஓட்டுநர் பத்திரம் உடைய சாரதி இல்லாத தானாக இயக்கப்படும் கார்களை தடை செய்ய கலிபோர்னியா ஆராய்ந்து வருகிறது. எனினும் இந்த நகர்வுக்கு கூகுள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .