Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 மார்ச் 31 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்சுங்கானது, தனது அலைபேசி பணப்பை சேவையினை சீனாவில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மேற்படிச் சேவையானது, இதையொத்த சீனாவின் உள்நாட்டு சேவையான UnionPay-இன் ஒத்துழைப்புடனேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படிச் சேவையின் மூலம், கடனட்டைகள், டெபிற் அட்டைகள் என்பவற்றைப் பயன்படுத்தி கடைகளில் கொள்வனவு செய்வதற்கு மாற்றீடாக, தங்களது திறன்பேசிகளைப் பயன்படுத்தி, கொள்முதல்களை நுகர்வோர் மேற்கொள்ள முடியும்.
இவ்வாறான தனது சேவையான Apple Pay systemத்தை கடந்த மாதம் சீனாவில் அப்பிள் அறிமுகப்படுத்தியிருந்தது. அப்பிளின் இச்சேவையும் UnionPay-இன் ஒத்துழைப்புடனேயே அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய திறன்பேசிச் சந்தையைக் கொண்டிருக்கும் சீனாவானது, அலைபேசி-கட்டண systemsகளுக்கு பாரிய வணிக வாய்ப்பை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Samsung Payயும் Apple Payயும், தற்போதைய சீன இலத்திரனியல் கட்டணச் சந்தையில் முன்னிலை வகிக்கும் Alibabaவின் Alipayயுடன் போட்டியிட வேண்டியுள்ளது.
Samsung Galaxy S7, Galaxy S7 edge, Galaxy S6 edge+, Galaxy Note5 உள்ளடங்கலாக பல திறன்பேசிகளில் Samsung Payயை சீனாவில் உபயோகிக்க முடியும் என தென்கொரிய இலத்திரனியல் ஜாம்பவானான சம்சுங் தெரிவித்துள்ளது. தவிர, Samsung Pay சேவையானது நடுத்தர மாதிரிகளுக்கும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீன சி.ஐ.டி.சி வங்கி, சீன கட்டுமான வங்கி, சீன எவெர்பிரைட் வங்கி உள்ளிட்ட சீனாவின் பிரதான வங்கிகள் ஒன்பதினது தெரிவு செய்யப்பட்ட கடனட்டை, டெபிற் அட்டைகளுக்கு Samsung Pay ஒத்துழைப்பு வழங்குகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
5 hours ago