Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தானாக செலுத்தப்படும் வாடகைக் கார்களை சிங்கப்பூருக்குள் கொண்டுவரும் ஒப்பந்தமொன்றுடன், உலகின் முதலாவது ஸ்மாட் தேசமாக மாற சிங்கப்பூர் தயாராகியுள்ளது.
தானியங்கி வாகனங்களை சோதிப்பதற்கு, தொடக்க நிறுவனமான nuTonomyயுடன் ஒப்பந்தமொன்றை கடந்த மார்ச் மாதத்தில் சிங்கப்பூர் அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தற்போது, வணிக நிலையங்களில் பயணிகளைக் காவிச் செல்வதற்கான சிறிய, தானியங்கி வாடகைக் கார் அணியொன்றை Delphi Automotive அறிமுகப்படுத்தியுள்ளது.
சாரதியில்லாத வாடகைக் காரின் மூலம் மூன்று ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதியான மைலொன்றுக்கான பயணத்தின் செலவை 90 சதங்கள் ஐக்கிய அமெரிக்க டொலர்களாக குறைக்கலாம் என Delphi Automotive நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில், கார்கள் சாரதிகளைக் கொண்டிருக்கவுள்ளதுடன், தானாக செலுத்தப்படும் அமைப்பு இயங்க மறுக்கும் சந்தர்ப்பத்தில் கார்களின் கட்டுப்பாட்டை சாரதிகள் எடுத்துக் கொள்ளவுள்ளனர். எனினும் இத்திட்டத்தின்படி, 2019ஆம் ஆண்டு சாரதியில்லாமலே, தானாகச் செலுத்தப்படும் வாடகைக் கார்கள் இயங்கவுள்ளன.
குறித்த கார்களில் பொருத்தப்பட்டுள்ள மென்பொருளின் மூலம், வாடகைக் கார் சேவையான ஊபர் போன்று, கார்களை வாடகைக்கு அமர்த்துவதற்காக கார்களை தொடர்பு கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடிக்கான தீர்வாக சாரதியில்லாத கார்கள் அமையும் என சிங்கப்பூர் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago