2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

சூம்மின் அப்டேட்டால் மாணவர்கள் அதிர்ச்சி; ஆசிரியர்கள் மகிழ்ச்சி

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக வீட்டில் இருக்கும் மாணவர்கள், சூம் (Zoom) உள்ளிட்ட வீடியோ செயலிகளைப் பயன்படுத்தி ஒன்லைன் வகுப்புகளில் கல்வி கற்று வருகின்றனர்.

நேரில் பார்த்துக்கொள்ள முடியாத மாணவர்கள் ஒன்லைன் வகுப்பில் பங்கேற்கும்போது ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர்.

 சவாலான இத்தகைய நேரத்தில் பாடம் எடுப்பது என்பது ஆசிரியர்களுக்கு கடினமாக இருக்கும் சூழலில் ஒன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்துகொள்ளும்போது, கவனச் சிதறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

 இதனால், ஆசிரியர்கள் மட்டும் அனைத்து மாணவர்களையும் பார்க்கும் வகையிலும், மாணவர்கள் ஆசிரியர்களை மட்டுமே பார்க்கும் வகையில் ‘Focus mode‘ என்ற புதிய அப்டேட்டை இச் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ் அப்டேட் மூலம் ஹோஸ்ட் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி கொடுக்கும் மற்றொரு கோ-ஹோஸ்ட் ஆகியோர் அனைத்து செட்டிங்ஸூகளையும் உபயோகிக்க முடியும். ஒருவகையில் மாணவர்களுக்கு இந்த அப்டேட் கவலையைக் கொடுத்தாலும், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியானதாக அமைந்துள்ளது.

 

இனி இந்த அப்டேட்டை  எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.


1. சூம் செயலியில் admin போர்டலில் Sign செய்து கொள்ள வேண்டும்.

2. Account Managemen - ஆப்சனை கிளிக் செய்து நேவிகேஷன் பேனலில் இருக்கும் Account Settings - ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்

3. பின்னர், Meeting tab - ஐ கிளிக் செய்ய வேண்டும்

4. Meeting ஒப்சனுக்கு கீழ் Focus Mode ஆப்சன் இருக்கும். அதனை உங்கள் விருப்பத்தின்பேரில் enable அல்லது disable செய்து கொள்ளுங்கள்.

5. அப்போது, வெரிபிகேஷனுக்காக மீண்டும் ஒருமுறை enable அல்லது disable கேட்கும். அதில், ஏற்கனவே கூறியதுபோல் உங்கள் விருப்பத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X