Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலத்துக்கு முன்னதாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று சொல்லப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
நாளை (21) நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் இதுதொடர்பாக, "லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப்பாதையில் செலுத்தும் வேலையில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. இந்த செயல்பாட்டின்போது தானியங்கு நிலையத்தில் அசாதாரண சூழல் எழுந்ததால், திட்டமிட்டப்படி அந்த செயல்முறையை மேற்கொள்ள முடியவில்லை. எனினும் விஞ்ஞானிகள் நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர்" என்று கூறியுள்ளது. மேலும், கூடுதல் விவரங்களை ரோஸ்காஸ்மோஸ் அளிக்கவில்லை.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. இது வரும் 23-ம் திகதி நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட உள்ளது.
லூனா-25 விண்கலம் வரும் 16-ம் திகதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு நிலவின் சுற்று வட்டப்பாதையை சுற்றி வரும் லூனா-25, வரும் 23-ம் திகதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் சந்திரயான் விண்கலத்துக்கு முன்னதாகவே தரையிறங்கும் என கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago