2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

கூகிளின் இரு புதிய திட்டங்கள்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூகிளானது, தனியாக ஒரு செய்திப் பரிமாற்றச் செயலியை உருவாக்கி வருவதாகவும் அதேவேளை போர்ட் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து தானியங்கி கார் தொழில்நுட்பத்தை தயாரிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூகிளினுடைய புதிய செய்திப் பரிமாற்றச் செயலியானது கூகிளின் செயற்கை நுண்ணறிவு know-howஐ தொட்டுச் செல்வதுடன் chatbotsஐக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதேவேளை, இந்தப் புதிய செயலியில், கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமாக, அந்தச் செயலியானது இணையத்திலும் வேறு தகவல் மூலங்களிலும் தேடுதலை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது.   

எனினும் எப்பொழுது இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றோ அல்லது எவ்வாறு இதற்கு பெயரிடப்படும் என்றோ தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .