Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 மே 05 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணயத் தேடல் இயந்திர ஜாம்பவானான கூகுளின் தானாக இயக்கப்படும் கார்கள் தொடர்பில் விரும்புவதற்கு பல விடயங்கள் இருந்தாலும், நீங்கள் பிள்ளைகளைக் கொண்டிருந்தால், அவர்களை நீங்கள் எங்காவது கூட்டிச் செல்வதற்கு ஒரு வாகனத் தொடரணி தேவைப்படும்.
எனவே மேற்கூறப்பட்ட விடயத்தினை கருத்திற் கொண்ட கூகுளின் தானாக இயக்கப்படும் கார்த் திட்டமானது, அழகிய நீண்ட கார்களை வடிவமைக்கும் கார்த் தயாரிப்பாளரான புதிய Pacifica minivan உடன் நேரடியான கூட்டிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி வாகனமானது hybrid ஆக இருப்பதால் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்குவது மட்டுமல்லாமல், உங்களது முழுக் குடும்பத்துக்கான இட வசதியையும் வழங்குகின்றது. இது தவிர, கூகுளுக்கு மிக முக்கியமான விடயம் என்னவெனில், கூகுளின் தானாக இயக்கப்படும் கார்கள் திட்டத்தில் Lexus SUVகள் சோதிக்கப்பட்டிருந்தாலும் அது வழமையானதாகவே கருதப்படுவதுடன் மேற்படி புதிய வாகனமானது இதுவரையில் சோதிக்கப்பட்டதை விட இது வேறுபட்ட வாகனமாகும்.
வலுவிழந்தவர்கள், வயதானவர்களுக்கு தானாக இயக்கப்படும் கார்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றபோதும் சக்கரக்கதிரை போன்றவற்றை எப்படி உள்ளே வைப்பது என்று சிக்கல் இருந்தது. இந்நிலையில், மேற்படி Pacifica போன்ற பெரிய வாகனங்களில் அவற்றையும் சோதனை செய்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கூகுளின் தானாக இயக்கப்படும் கார்களுக்கான உணரி அமைப்புடன் பணியாற்றுவதற்காக ஏறத்தாள 100 வாகனங்கள் சிறப்பாக Fiat Chrysler Automobilesஆல் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது, சோதனையானது ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள சோதனைத் தடத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
5 hours ago