2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

குறுந்தகவல்களைத் திரும்பபெறும் வசதி - FB

Editorial   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில், குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதியை விரைவில் வழங்கப்பட இருப்பதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

குறுந்தகவல்களைத் திரும்பபெறும் புதிய வசதி அனைவருக்கும் வழங்கப்படும் வரை, மார்க் ஜூக்கர்பெர்க் அனுப்பிய குறுந்தகவல்கள் எதுவும் அழிக்கப்படமாட்டாது, என பேஸ்புக் அறிவித்துள்ளது.

பேஸ்புக்கில், அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சில பயனாளர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது​.

குறுந்தகவல்களை அழிக்கும் வசதி வழங்குவது குறித்து பலமுறை விவாதிக்கப்பட்டது. இந்த வசதியானது, Messanger செயலியில் Encrypted Version இல் பயன்படுத்தப்படுகிறது.

இதில் பயனாளர் குறிப்பிட்ட கால அளவை குறிப்பிட்டு, குறுந்தகவல் அனுப்பினால், சரியான நேரத்தில் அனுப்பிய குறுந்தகவல் அழிக்கப்பட்டு விடும்.

இது குறித்து பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “குறுந்தகவல்களை அழிக்கும் வசதியை அனைவருக்கும் வழங்குவோம். எனினும், இதற்கு சில காலம் தேவைப்படும்” என தெரிவித்துள்ளார்.

Facebook Messanger இல் வழங்கப்படும் இரகசிய அம்சம் கொண்டு அனுப்பிய குறுந்தகவல்கள் தானாக அழிக்கப்பட்டு விடும். இதற்கான கால அளவு, குறைந்தபட்சம் ஐந்து நொடிகளில் இருந்து அதிகபட்சம் 24 மணிநேரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய அம்சம் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது எவ்வாறு வேலை செய்யும் என்பது உறுதி செய்யப்படவில்லை. இதுவரை தனது சேவைகளில் குறுந்தகவல்களை திரும்ப பெற இருவித அம்சங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப் செயலியில், குறுந்தகவல்கள் அனுப்பிய குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அவற்றை அழித்து விடலாம். எனினும், அழிக்கப்பட்ட குறுந்தகவல் ‘Your message has been deleted’ என்ற வார்த்தையாக மாற்றப்பட்டுவிடும். அதே போல, இன்ஸ்டாகிராமிலும் குறுந்தகவலை பயனாளர் பார்க்காத வரையில் அழிக்க முடியும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X