2024 நவம்பர் 02, சனிக்கிழமை

ஒரு மில்லியனைத் தாண்டுகிறது Pick Me

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 25 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

Pick Meயானது சிறந்த சேவையை வழங்குவதன் ஊடாக புதியதொரு மைல் கல்லை எட்டியுள்ளதோடு புதிய வருடத்தில் நூறு ஆயிரம் வாடிக்கையாளர்களையும் ஒரு மில்லியன் பயணக் கோரிக்கைகளையும் பதிவு செய்துள்ளது. Pick Meயின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜிப்ரி சுல்பர், இதுதொடர்பில் கூறுகையில், நாம் இதனை ஆரம்பித்து குறுகிய காலமே ஆகியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கையானது நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது மற்றும் எமது செயலியைப் பயன்படுத்திய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எமது நிறுவனம் இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

“2016ஆம் ஆண்டிற்குள் ஒரு மில்லியன் பதிவுகளை அடைவதே எமது இலக்கு. அதேநேரம் எமது சேவையை விஸ்தரித்து அதனை நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அத்துடன் கொழும்பில் நாம் செய்யும் சுறுசுறுப்பான சேவையை நாடுமுழுவதிலும் விஸ்தரிக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.” என அவர் தெரிவித்தார்.

எமது நிறுவனமானது கொழும்பில் மாத்திரம் 3000 வாகனங்களை இந்த சேவைக்காக பயன்படுத்தி வருதோடு, கடந்த கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட பண்டிகைக் காலங்களின் போது பெரும் அழுத்தங்களுக்கு மத்தியில் துரிதமான சேவையையும் வழங்கியது. “இந்த அழுத்தம் மிகவும் நல்லதென்றே கூறவேண்டும். ஏனென்றால் கொழும்பில் எமது சேவையை விரிவாக்க வேண்டியதன் தெளிவான அறிகுறியையே இந்த அழுத்தம் சுட்டிக்காட்டியது. பெரும்பாலான கார்ச் சாரதிகள் எமது வலைப்பின்னலுடன் இணைய விண்ணப்பித்துள்ளனர் எனினும் அவர்களை பரிசீலித்து எமது வலைப் பின்னலுடன் இணைத்துக் கொள்ளவுள்ளோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் Pick Meயின் தேவை குறைவாகக் காணப்படுவதாக ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. இதற்கான காரணம் என்னவெனில் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் வாகன சாரதிகளுக்கு எரிபொருள் வீண் விரையம் ஏற்படுவதால் வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்தாமல் தேவை குறைவாக இருக்கும் நேரங்களில் வாகனத்தை செலுத்த விரும்புவதே இதற்குக் காரணம். அந்த நேரங்களிலேயே இந்த பிரச்சினை தோன்றுகின்றது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிறுவனம் பல்வேறு செயற்திட்டங்களை முன்வைத்துள்ளது. தவிர, தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் சேவையில் ஈடுபடும் எமது வாடகைக்கார் சாரதிகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு, அவர்களுக்கு ஊக்குவிப்பு செயற்திட்ட முறைகளையும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

விடுமுறைக் காலத்தின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகன வாடகைக் கோரிக்கை அழைப்புக்கள் வந்தன. அவ்வாறு வாகன வாடகைக்கு கோரியவர்களுக்கு புதியதொரு கட்டண முறையை அறிமுகம் செய்து அவர்களுக்கு வழமையை விட குறைந்த கட்டணத்தை Pick Meயானது அறவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக கொழும்பில் இருந்து காலி செல்வதற்கு அறவிடப்பட்ட கட்டணமானது வழமையைவிட குறைத்தே அறவிடப்பட்டது. “இதனை ஆரம்பித்த நாள் முதல் நாம் உடனடி வாடகை வாகன சேவைகளை வழங்கிய போதிலும் தற்போது நீண்ட தூரத்திற்கான வாகன முற்பதிவு செய்து கொள்வதற்கும் வாடிக்கையாளர்கள் கோருகின்றனர். இதற்காக புதிய வியூகங்களையும் வகுத்து செயற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .