2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

ஒராக்கிளுடனான ஜாவா மோதலில் கூகுளுக்கு வெற்றி

Shanmugan Murugavel   / 2016 மே 29 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூகுளின் அன்ட்ரொயிட் இயங்குதளத்தில் ஜாவா மென்பொருளை பயன்படுத்தியமை தொடர்பில் ஒராக்கிளுடனான சட்ட ரீதியான மோதலில் கூகுள் வென்றுள்ளது.

தனது காப்புரிமையை சட்ட ரீதியாக கூகுள் மீறியுள்ளதாக வாதிட்ட ஜாவாவை ஆளும் ஒராக்கிளானது, ஏறத்தாழ ஒன்பது பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை நட்டஈடாக கோரியிருந்தது.

ஜாவா பரவலாக பயன்படுத்தப்படுகையிலும், உலகிலுள்ள 80 சதவீதமான அலைபேசிச் சாதனங்கள் அன்ட்ரொயிட்டில் இயங்குகையிலும், நீண்ட காலமாக இருக்கும் மேற்படி சட்ட மோதலானது மிகவும் உன்னிப்பாக உலகம் முழுவதும் அவதானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. அடிப்படையான ஜாவா தொழில்நுட்பத்தை சட்டரீதியற்ற முறையில் பிரதி செய்தே அன்ட்ரொயிட்டை கூகுள் உருவாக்கி, அலைபேசி சாதனச் சந்தையினுள் விரைவாக நுழைந்தது என தாங்கள் உறுதியாக நம்புவதாக ஒராக்கிளின் வழக்கறிஞர் டோரியான் டலேய் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நியாயமான பாவனை என்ற உட்கூறின் கீழ், ஜாவாவை இலவசமாக தங்களால் பயன்படுத்த முடியும் என கூகுளின் பிரதான நிறுவனமான அல்பபெட் நிறுவனம் வாதிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிமை விதியின் படி, நியாயமான பாவனையின் கீழ், உரிமைத்தைக் கொண்டிருப்பவர்களின் அனுமதியில்லாமல் சில கையாளல்களை மேற்கொள்ள முடியும்.

இந்நிலையில், மேற்கூறப்பட்ட வாதத்தை, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஐக்கிய அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதிகள் சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .