Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 28 , மு.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐபோன்களின் விற்பனை, தொடர்சியாக இரண்டாவது காலாண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அப்பிள் தெரிவித்துள்ள போதும், குறித்த 15 சதவீத வீழ்ச்சியானது, ஆய்வாளர்கள் அஞ்சியது போன்று மோசமாக இருந்திருக்கவில்லை.
ஐக்கிய அமெரிக்க தொழில்நுட்ப ஜாம்பவானான அப்பிள், தனது மூன்றாவது காலாண்டில் 40.4 மில்லியன் ஐபோன்களை விற்றுள்ளது. குறித்த எண்ணிக்கையானது, எதிர்பார்க்கப்பட்ட 40.02 மில்லியன் எண்ணிக்கையை விட சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், நான்காவது காலாண்டில், தனது விற்பனைகள், 45.5 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கும் 47.5 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கிடையில் வீழ்ச்சியடையும் என அப்பிள் எதிர்பார்க்கின்றது.
2007ஆம் ஆண்டு ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், முதற்தடவையாக, ஐபோன் விற்பனை குறைவடைவதாக தெரிவித்தது முதல், ஐபோன்களுக்கான தேவை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அப்பிளின் விற்பனைகளில், மூன்றிலிரண்டு பங்கு, ஐபோன்களாகவே இருக்கின்றதோடு, அப்பிளின் வருமானத்தில், மூன்றிலிரண்டு பங்குக்கு மேலான வருமானம், ஐபோன்களிலிருந்தே கிடைக்கின்றது.
ஐபோன்களின் விற்பனை குறைவடைந்தமை காரணமாக, ஜூன் மாதம் 25ஆம் வரையான இறுதி மூன்று மாதங்களில், அப்பிளின் நிகர இலாபமானது 27 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 7.8 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகியுள்ளதோடு, அப்பிளின் வருமானது, 14.6 சதவீதமானத்தால் குறைவடைந்து 42.4 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகியுள்ளது.
இது தவிர, சீனா, ஹொங் கொங், தாய்வான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி பெரிய சீனா என அப்பிளால் அழைக்கப்படும் பிரதேசத்தில், அப்பிளின் விற்பனையானது, 33 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகையில், இப்பிரதேசத்திலுள்ள பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாகவும், தங்களுடைய அலைபேசிகளை இற்றைப்படுத்தாமை காரணமாகவுமே விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக அப்பிள் தெரிவித்துள்ளது. அப்பிளின் விற்பனைகளில், ஏறத்தாழ, நான்கிலொரு பங்கு, குறித்த பிரதேசத்திலேயே விற்பனையாகிறது. குறித்த எண்ணிக்கையானது, மொத்த ஐரோப்பா விற்பனையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago
3 hours ago