Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 09, புதன்கிழமை
Ilango Bharathy / 2022 ஜூலை 09 , மு.ப. 09:28 - 0 - 112
உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் (Elon musk) பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை அண்மையில் வாங்கினார்.
இதனால் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகள் 26 சதவீதம் வரை உயர்வடையவே அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக எலன் மஸ்க் மாறினார்.
இதனைத் தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் எலன் மஸ்க்கும் இணையவுள்ளதாக அந்நிறுவன தலைமை செயற்பாட்டு அதிகாரி பராக் அகர்வால் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் போலி கணக்குகள் குறித்த தகவல்களை தராததை அடுத்து 44 பில்லியன் டொலர் கொடுத்து டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து டுவிட்டரை வாங்கும் முடிவில் இருந்து எலான் மஸ்க் விலகினால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக ட்விட்டர் தலைவர் பிரட் டெய்லோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago