2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

இன்ஸ்டாவில் வெளியான புது அம்சம்

Freelancer   / 2023 நவம்பர் 26 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்ஸ்டாகிராம் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ரீல்ஸ்-ஐ நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். அந்த வகையில், பயனர்கள் இனிமேல் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இந்த அம்சம் தற்போதைக்கு பப்ளிக் அக்கவுண்ட்-களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பயனர்கள் விரும்பினால் ரீல்ஸ் டவுன்லோட் செய்யப்படுவதை தடுக்கும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்யும் புதிய அம்சம் குறித்த தகவலை இன்ஸ்டாகிராம் செயலிக்கான தலைவர் ஆடம் மொசெரி தனது சேனலில் தெரிவித்தார். ஏற்கனவே இந்த அம்சம் அமெரிக்க பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது உலகளவில் பயனர்கள் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்யும் வசதி  வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அம்சம் பயனர்கள் பப்ளிக் அக்கவுண்ட்களில் இருந்து ரீல்ஸ்-ஐ சேவ் செய்து கொள்ள அனுமதிக்கிறது. இவ்வாறு டவுன்லோட் செய்யப்படும் ரீல்களில், அதனை உருவாக்கிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டின் லோகோ வாட்டர்மார்க் (ரீல்ஸ் பின்னணியில் காட்சி குறியீடு) செய்யப்பட்டு இருக்கும்.

இன்ஸ்டா ரீல்ஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

புதிய அப்டேட் மூலம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்ய, குறிப்பிட்ட ரீல்ஸ்-இல் இருந்த படி ஷேர் செய்யக் கோரும் பேப்பர் ஏர்பிளேன் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு, டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷனை பார்க்க முடியும். அதனை க்ளிக் செய்ததும் ரீல்ஸ் சாதனத்தில் டவுன்லோட் செய்யப்பட்டு விடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .