2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

இந்திய சந்தையில் விரைவில் 5G தொழில்நுட்பம்

J.A. George   / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய சந்தையில் விரைவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் 5ஜி சேவையை வழங்க தயாராகி வருகின்றன. 

இந்த நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கலாம் என கூறப்படுகிறது.

5ஜி சோதனை குறித்து மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய்-க்கு வந்த 16 கோரிக்கைகள் பற்றி பாராளுமன்ற குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த குழு, இந்தியாவில் ஏன் இன்னும் 5ஜி சேவைக்கான சோதனை ஆரம்பிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

டெலிகாம் நிறுவனங்களுக்கு இதுவரை 5ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கப்படாதது பற்றி பாராளுமன்ற குழு வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழலில் ஸ்பெக்ட்ரம் அலைகற்றை வாங்கும் முறை முன்பை விட எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 5ஜி சோதனைக்கான விண்ணப்பங்களில் கல்வி, ஆரோக்கியம், விவசாயம், பொது பாதுகாப்பு போன்ற பிரிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X