Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2015 நவம்பர் 24 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் கொழும்பில் இடம்பெற்றிருந்த ஆசிய பசுபிக் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விருது வழங்கும் விழாவில் சிறந்த தொழில்நுட்பத் திறமைகளை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி, மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியது.
ஆசிய, பசுபிக் பிராந்தியத்திலிருந்து 17 நாடுகளைச் சேர்ந்த 197 தயாரிப்புக்கள், மேற்படி விருதுகளுக்காக போட்டியிட்ட நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த 50 பேர், தமது 22 தயாரிப்புக்களை முன்வைத்து போட்டியிட்டிருந்தனர்.
இதில், Eyedeus Labsஐச் சேர்ந்த அணி தமது தயாரிப்பான “Ingrain”க்காகவும், Evamp & Sanga அணியானது தமது தயாரிப்பான Mobile Audio Streaming Service க்காகவும், NUST மின்னியியல் மற்றும் இயந்திரவியல் பொறியியியல் கல்லூரியின் மாணவர்கள், தமது ஆய்வுத் திட்டமான Active and Intelligent Powered Ankle Foot Prosthesis for Trans-tibial Amputeesக்காகவும் தங்கப்பதக்கங்களை பெற்றதோடு, கராச்சியில் உள்ள The Nest i/o – P@SHA’s Technology Incubatorஇன் இளம் அணியொன்று Teddict திட்டத்துக்காக வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருந்தது.
இந்த விருதுகளுக்காக மூன்று நாட்கள் இடம்பெற்ற போட்டியானது சிறந்த தொழில்நுட்ப அறிவைக் கொண்ட பதினேழு சர்வதேச நடுவர்களால் மத்தியஸ்தம் செய்யப்பட்டிருந்தது.
மேற்படி விருதுகள் வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கலந்து கொண்டதோடு, இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஷகீல் ஹுஸைனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
ஆசிய பசுபிக் பிராந்தியத்திலுள்ள சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களிடையேயும், தொழில்நுட்ப நிபுணர்களிடையேயும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கற்கைநெறி மாணவர்களிடையே அறிமுகத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்களையும், வியாபாரத்தை மேற்கொள்ளவும், முதலீட்டை பெற்றுக் கொள்ளவும், செய்யவும் மேற்படி நிகழ்வு சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago