Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜனவரி 14 , மு.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது பத்தாவது வருட நிறைவைக் கொண்டாடுகின்ற ஸ்கைப்பானது, இலவசக் குழுக் காணொளி அழைப்பு வசதியை அன்ட்ரொயிட், ஐபோன், ஐபாட், வின்டோஸ் 10 என அனைத்து அலைபேசிசிச் சாதனங்களில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை (12) அறிவித்துள்ளது. இவ்வசதியானது, கடந்த சில வருடங்களாக டெஸ்க்டொப் கணனிகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முற்றிலும் இலவசமாக இவ்வசதியை எதிர்வரும் வாரங்களில் தமது மில்லியன் கணக்கான அலைபேசி பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், ஏனையவர்களை விட, முன்னதாக இவ்வசதியை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், ஸ்கைப்பின் இணையத்தளத்துக்குச் சென்று, அங்குள்ள முற்பதிவுப் படிவத்தைப் பூர்த்தி செய்தால், உங்களுக்குரிய அலைபேசியில், இவ்வசதியை முன்னரே செயற்படுத்தி, சில நாட்களிலேயே மின்னஞ்சல் மூலமாக இவ்வசதி தொடர்பான அறிவுறுத்தல்களை ஸ்கைப் வழங்கும். எனினும் இவ்வசதியானது பீட்டா பதிப்புச் செயலியாக வழங்கப்படுமா அல்லது ஏற்கனவே உள்ள செயலியில் இற்றைப்படுத்தலாக வருமா என்று தெரியவில்லை.
மேற்கூறப்பட்டுள்ள முற்பதிவு படிவத்தில், உங்களது மின்னஞ்சலும் ஸ்கைப் பெயரும் உங்களது நாடு எதுவென்றும் நீங்கள் பயன்படுத்தும் சாதனம், வின்டோஸ் 10 அலைபேசியா அல்லது அன்ரொயிட் சாதனமா அல்லது ஐபோனா அல்லது ஐபாட்டா என்று வினவப்பட்டிருந்தது.
தமது பத்தாண்டு நிறைவில், இச்சேவை தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ஸ்கைப், தமது சேவைகள் தொடர்பான தரவுகளையும் வெளியிட்டுட்ள்ளது. அதன்படி, கடந்த பத்தாண்டுகளில் இரண்டு ட்ரில்லியன் நிமிடங்கள், இலவச ஸ்கைப் அழைப்புக்கள் உலகம் பூராவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தவிர, 2010ஆம் ஆண்டு அலைபேசி சாதனங்களில் ஸ்கைப் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, 750 மில்லியன் பேர் அலைபேசிச் சாதனங்களில் ஸ்கைப்பை பயன்படுத்தியதாகவும் கடந்த இரண்டாண்டுகளில் பயனர்களின் எண்ணிக்கை 10 மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
52 minute ago
1 hours ago