Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 மார்ச் 24 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்பிள் நிறுவனமானது, கடந்த திங்கட்கிழமை (21), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள குப்பச்சினோ நகரத்தில் அமைந்துள்ள அப்பிள் நிறுவனத்தின் தலைமையகமான அப்பிள் கம்பஸ்ஸில் இடம்பெற்ற நிகழ்வில் சிறிய ஐபோன், ஐபாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு சிறிய ஐபோன்களே பெருமளவில் விற்பனையாகியிருந்த நிலையில், பிரதானமாக, சீனா, இந்தியா ஆகிய சந்தைகளை குறிவைத்தே மேற்குறித்த விலை குறைவான சிறிய ஐபோன், ஐபாட்டை அப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஐபோன் SE ஆனது நான்கு அங்குல திரையைக் கொண்டிருப்பதுடன், பொதுவாக ஐபோன் 5sஇன் பொதுவான வடிவமைப்புகளை கொண்டிருப்பதுடன், இது, விண்வெளி சாம்பல் நிறம், வெள்ளி, தங்கம், மென்சிவப்பு தங்கம் ஆகிய நிறங்களில் வெளிவரவுள்ளது.
தவிர, இது, Apple Payக்காக NFC chipஐ கொண்டிருப்பதுடன், மிக வேகமான A9 processorஐயும் M9 அசைவு co-processorஐயும் கொண்டிருக்கிறது. இதனால், ஐபோன் 6s இன் வேகத்தில் இது இயங்கவுள்ளது. தவிர, இது 12 மெகா பிக்ஸல் கமெராவையும் கொண்டமைந்துள்ளது. இது தவிர, அதிகாலை, மாலை, இரவு வேளைகளில் நிறமாற்றமடையக் கூடிய இயங்குதளத்தையும் கொண்டமைந்துள்ளது.
இது, 16GB, 64GB என இரண்டு வகைகளில், முறையே $399, $499க்கு எதிர்வரும் வியாழக்கிழமை (31) முதல் வெளிவரவுள்ளதுடன், மே மாதமளவில் 100 நாடுகளில் கிடைக்கக் கூடிய வகையில் இருக்கும்.
இதேவேளை, 9.7 அங்குலம் அளவிலான ஐபாட் ப்ரோவையும் அப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நான்கு ஒலிபெருக்கிகள் காணப்படுவதுடன் 4K காணொளிகளை பதிவு செய்யக் கூடிய 12 மெகாபிக்ஸல் கமெராவும் காணப்படுகிறது. இது, 32GB, 128GB, 256GB ஆகிய வகைகள் முறையே $599, $749, $899 ஆகிய விலைகளில் அடுத்த மாத ஆரம்பத்தில் கிடைக்கக் கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, மேற்படி நிகழ்வின் அப்பிள் வோட்ச்சின் வேறு நாமங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. தவிர, இதன் அறிமுக விலையும் 349 ஐக்கிய அமெரிக்க டொலர்களிலிருந்து 50 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் குறைக்கப்பட்டு 299 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக உள்ளது.
இதேவேளை, அப்பிள் டிவி இயக்குதளமானது, folders, dictation, Live Photos, Siri ஆகிய வசதிகளை உடைய இற்றைப்படுத்தல்களை பெறவுள்ளதுடன், இதில் மேலதிகமாக, 5,000 புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது தவிர, இந்நிகழ்வின்போது, ஐபோன்களை உடைத்து மீள்சுழற்சிக்குள்ளாக்கும் லியாம் என்ற ரோபோவையும் அப்பிள் காண்பித்திருந்தது. தவிர, உடல் நல செயலிகளை உருவாக்கும் வடிவமைப்பாளர்களுக்காக CareKit எனப்படும் வடிவமைப்பாளர் கருவியொன்றையும் அறிமுகப்படுத்தியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
5 hours ago