2024 நவம்பர் 02, சனிக்கிழமை

அரசியலைத் தீர்மானிக்க டுவிட்டர் பொருத்தமில்லை

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகத்தில் காணப்படும் அனைத்து பிரபலத்தன்மையும் நல்ல பிரபலத்தன்மையே என்று அரசியலில் பொதுவாக கூறப்படுகின்ற நிலையில், இது, கட்டாயம் டுவிட்களுக்கு பொருந்தவேண்டும் என்று அவசியமில்லை என இவ்வாரம் வெளியான ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது.

டுவிட்டரில் வேட்பாளர் ஒருவர் பெறும் பிரபலத்தன்மையை வைத்து தேர்தலின் முடிவை எதிர்வு கூறுவது கடினம் என சமூக விஞ்ஞான கணினி ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும் இவ்வருட ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுடன் இவ்வாய்வின் தொடர்பை டுவிட்டர் நிராகரித்துள்ளது.

இதேவேளை, 2013ஆம் ஆண்டு ஜெர்மனி மத்திய தேர்தலில் டுவிட்டரின் தரவுகள், வேட்பாளர்கள் மீதான ஆதரவையன்றி, அவர்கள் மீதான ஆர்வத்தையே வெளிப்படுத்துவதாக மிகத் துல்லியமானதாக முடிவுகள் இருந்தன என்று அவ்வாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் போன்ற எதிர்மறையான நிகழ்வுகளும் கட்சி அல்லது வேட்பாளரின் அடைவுகள் போன்ற நேர்மறையான எண்ணங்கள் என இரண்டும் கட்சி அல்லது வேட்பாளர் மீது கவனத்தை ஈர்க்கும் என கடந்த திங்கட்கிழமை (15) வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அரசியல் மோசடிக் குற்றச்சாட்டுக்களும் அடைவுகளும் வேட்பாளர் ஒருவரின் ஆதரவு மட்டத்தை வெவ்வேறு வழிகளில் பாதிக்கின்றன.

ஆய்வுகளின் படி, இலகுவான சூத்திரமான நிறைய டுவிட்கள், நிறைய வாக்குகள் செல்லுபடியாகாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உதாரணமாக, இரவுச் செய்தியில் வரும் வேட்பாளர் ஒருவரின் பிரசாரத் தவறுகள், டுவிட்டரில் கவனத்தை பெறுகின்றபோதும் ஒட்டுமொத்தமான அரசியல் ஆதரவில் தாக்கம் செலுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இம்மாதம், ஐயோவாவில் இடம்பெற்ற கட்சிகளுக்குள்ளேயான வாக்கெடுப்பின் போது, வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வேட்பாளர்களான, ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி கிளின்டனும் குடியரசுக் கட்சியில் டொனால்ட் ட்ரம்பும் டுவிட்டர் பயனர்களால் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .