Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Kogilavani / 2015 பெப்ரவரி 09 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் சுகாதார தொண்டர்களாகக் கடமையாற்றும் 63 பேருக்கும் விரைவில் நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் திங்கட்கிழமை உறுதியளித்தார்.
முல்லைத்தீவுக்கு திங்கட்கிழமை(9) விஜயம்மேற்கொண்ட அமைச்சரை குறித்த சுகாதார தொண்டர்கள் சார்பில் குழுவொன்று கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார தொண்டர்கள்,
'கடந்த 1995ஆம் ஆண்டிலிருந்து நியமனங்களை பெற்றவர்கள் இருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரைக்கும் நிரந்தர நியமனமின்றி வெறும் 6000 ரூபாய் மாதாந்த சம்பளத்திற்கே கடமையாற்றி வருகிறோம்.
1995ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரைக்கும் பல கஷ்டங்களுடன் சுகாதார தொண்டர்களாக கடமையாற்றும் 63 ஊழியர்களில் பத்துக்கும் அதிகமானவர்கள் வயது கூடியவர்களாக உள்ளனர்;. அவர்கள் இன்னும் ஓரிரு வருடங்களில் ஓய்வு பெறப் போகிறார்கள்.
இது அவர்களிடையே மாத்திரமின்றி அவர்களின் குடும்பத்திலும் பெரும் மனச்சோர்வையே ஏற்படுத்தியுள்ளது. இந்த 63 பேரில் பலர் திருமணம் முடித்தவர்கள். பிள்ளைகள் உள்ளனர்.
நிரந்தர நியமனம் வழங்குவதாக பல தடவைகள் ஏமாற்றப்பட்டுள்ளோம். இந்த புதிய அரசிலாவது எமக்கான நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார தொண்டர்கள் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.
இந்த பிரச்சினை குறித்து வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரிடம் கலந்தரையாடி விரைவில் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக அமைச்சர் இதன்போது வாக்குறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
5 hours ago
8 hours ago